பியா ராய் சவுத்ரி

இந்திய நடிகை

பீயா ராய் சவுத்ரி பியா ராய் சவுத்ரி இந்தியாவின் பெங்களுருவில் பிறந்த திரைப்பட நடிகையும்,[1] நடனக் கலைஞரும், நடன இயக்குநரும், தொழிலதிபருமாவார். குரிந்தர் சாதாவின் பிரைட் அண்ட் ப்ரெஜூடிஸில் லக்கி என்ற கதாபாத்திரத்திலும், தி பாங் கனெக்ஷன் திரைப்படத்தில் ரீட்டாவாகவும் நடித்து புகழ்பெற்ற இவர், ஹிப் ஹிப் ஹுரே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "கிரண்" ஆக நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமாயுள்ளார்.

பியா ராய் சவுத்ரி
அஹிஸ்டா அஹிஸ்டாவின் முதல் காட்சியில் பியா ராய் சவுத்ரி
தேசியம் இந்தியன்
குடியுரிமை இந்தியன்
தொழில் நடிகை
ஆண்டுகள் செயலில் 1999-2006
மனைவி ஷயான் முன்ஷி (2005-2010)

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

பெங்களூரில் பிறந்த பியா, மும்பை தேசிய கல்லூரியில் கல்லூரிப்படிப்பை முடித்துள்ளார். இவரது ஆறு வயதில் இருந்தே இந்திய பாரம்பரிய நடனக்கலையை பயிற்சி செய்து வந்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை

தொகு

தனது பதினேழாவது வயதில் ஹிப் ஹிப் ஹர்ரே என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடருடன் தனது திரைவாழ்க்கையை தொடங்கியுள்ள பியா, வி தொலைக்காட்சியில் காணொளி தொகுப்பாளராகவும் பணியாற்றி பெயர் பெற்றுள்ளார்.புது தில்லியில் அமைந்துள்ள தேசிய நாடகப் பள்ளியில் நாடக ஆசிரியர் அமல் அல்லானாவிடமும், நாடக குருவும் திரைப்பட இயக்குனருமான அலிக் பதம்சியிடமும் நாடகக்கலையை கற்றுள்ளார். நியூயார்க் திரைப்பட அகாடமியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பதினைந்து வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட மாணவர்களில் ஒருவராக இருந்து நடிப்பு பயிற்சியை பெற்றுள்ளார்.[2]

பியாவின் கடின உழைப்பு மற்றும் பயிற்சியின் விளைவாக புகழ்பெற்ற நாடக இயக்குநர் அலிக் பதம்சியின் ரோமியோ மற்றும் ஜூலியட் நாடகத்தில் ஜூலியட் பாத்திரத்திலும் , ராம் கோபால் வர்மாவின் திரைப்படங்களான தர்னா மனா ஹை மற்றும் வாஸ்து சாஸ்த்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் பிரபல பிரித்தானிய இயக்குநர் குரிந்தர் சத்தாவின், பெர்செப்ட் பிக்சர் நிறுவனத்தின் சர்வதேச திரைப்படமான ப்ரைட் அண்ட் ப்ரெஜுடிஸ், திரைப்படத்தில் லக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஸ்டார்டஸ்ட் விருதை வென்றுள்ளார். டிரக் ஆஃப் ட்ரீம்ஸ் மற்றும் இந்தோ-பெங்காலி திரைப்படம் பாங் கனெக்ஷன் மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

2006 ஆம் ஆண்டில் சயான் முன்சி என்ற சக விளம்பரக் கலைஞரை திருமணம் செய்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் விவாகரத்தும் செய்துள்ளார். சயான் முன்சி ஜெசிகா லால் கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய சாட்சியாக கருதப்பட்டவர்.[3]

திரைப்படவியல்

தொகு
  • பீயாவாக பூட் (2003).
  • சுப்கே சே (2003) ஷீட்டலாக
  • தர்னா மனா ஹை (2003) மெஹனாஸாக
  • வாஸ்து சாஸ்திரம் (2004) (பியா ராய் சௌத்ரே என வரவு) ராதிகாவாக
  • மணமகள் மற்றும் தப்பெண்ணம் (2004) (பெய ராய் சௌதுரி என வரவு) லக்கி பக்ஷி
  • ஹோம் டெலிவரி: ஆப்கோ. ' கர் தக் (2005) அம்மாவின் பீட்சாவில் பணியாளராக
  • என் சகோதரன். நிகில் (2005) கேத்தரின்
  • தி பாங் இணைப்பு (2006)
  • தி டிரக் ஆஃப் ட்ரீம்ஸ் (2006)

மேற்கோள்கள்

தொகு
  1. Arora, Akash (18 February 2005). "Weddings, chapatis, everything". The Sydney Morning Herald. http://www.smh.com.au/news/Film/Weddings-chapatis-everything/2005/02/17/1108500198728.html. பார்த்த நாள்: 17 July 2011. 
  2. "ஓமாஜியோவில் பீயா ராய் சவுத்ரி, கோவாவில் உள்ள அவரது கலைப் பள்ளி".
  3. "Shayan Munshi splits with wife". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029192344/http://articles.timesofindia.indiatimes.com/2010-12-09/news-interviews/28235546_1_shayan-munshi-jessica-lal-film. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியா_ராய்_சவுத்ரி&oldid=4169359" இலிருந்து மீள்விக்கப்பட்டது