தேசிய நாடகப் பள்ளி

தேசிய நாடகப் பள்ளி (National School of Drama) என்பது இந்தியாவின் புதுதில்லியில் அமைந்துள்ள ஒரு நாடக பயிற்சி நிறுவனமாகும். இது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சியான அமைப்பாக செயல்படுகிறது. இது 1959ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமியால் அமைக்கப்பட்டது. மேலும், 1975இல் ஒரு சுயாதீனமான பள்ளியாக மாறியது. [1] 2005ஆம் ஆண்டில், இதற்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால் 2011இல் அது ரத்து செய்யப்பட்டது. [2]

தேசிய நாடகப் பள்ளி
வகைபொது நிறுவனம்
உருவாக்கம்1959
தலைவர்பரேஷ் ராவல் (2020–தற்போது வரை)
பணிப்பாளர்சுரெஷ் சர்மா (செப்டம்பர் 2018 - தற்போது வரை)
அமைவிடம், ,
இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புசங்கீத நாடக அகாதமி
இணையதளம்www.nsd.gov.in

வரலாறு

தொகு

பள்ளியின் தோற்றம் 1954ஆம் ஆண்டில் ஒரு கருத்தரங்கில் தொடங்கியது. அங்கு நாடகத்திற்கான ஒரு மைய நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனை உருவாக்கப்பட்டது. பின்னர், 1955ஆம் ஆண்டில் ஒரு வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஜவகர்லால் நேருவை அதன் தலைவராகக் கொண்டிருந்த சங்கீத நாடக அகாதமி, நிறுவனத்திற்கான திட்டங்களை மேற்கொகொள்ளத் தொடங்கியது. இதற்கிடையில், தில்லியின் பிற இடங்களில், யுனெஸ்கோவின் உதவியுடன் பாரதிய நாட்டிய சங்கம் என்ற சுயாதீன நிறுவனம் 20 சனவரி 1958 இல் நிறுவப்பட்டது. சூலை 1958 இல் சங்கீத நாடக அகாதமி இதனை கையகப்படுத்தியது. [3] [4]

அடுத்த ஆண்டில், அரசாங்கம் இதை புதிதாக நிறுவப்பட்ட பள்ளியுடன் இணைத்தது. இதனால் தேசிய நாடகப்பள்ளி ஏப்ரல் 1959 இல் சங்கீத நாடக் அகாதமியின் அனுசரணையில் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில், இந்த பள்ளி மேற்கு நிசாமுதீனில் அமைந்திருந்தது. மற்றும் 'தேசிய நாடகப்பள்ளி மற்றும் ஆசிய நாடக நிறுவனம்' என்று அழைக்கப்பட்டது, அதன் முதல் தொகுதி மாணவர்கள் 1961 இல் வெளியேறினர். இந்நிறுவனத்தின் இயக்குநராக இருந்த காலத்தில், இப்ராஹிம் அல்காசி (1962-1977), பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், மாணவர்கள் வாடகைக்கு எடுத்த கைலாஷ் காலனி வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு நாடக அரங்கத்திற்கான தளங்களைத் கட்டியெழுப்பினர். பின்னர் இது அங்கே செயல்பட ஆரம்பித்தது. பின்னர் அது தற்போதைய இடத்திற்கு சென்றபோது, அவர் 200 இருக்கைகள் கொண்ட நாடக அரஙக்ம் மற்றும் ஒரு ஆலமரத்தின் கீழ் திறந்தவெளி மேக்தூத அரங்கம் உள்ளிட்ட இரண்டு அரங்கங்களையும் உருவாக்கினார். [4] [5] செப்டம்பர் 10, 2020 நிலவரப்படி, தேசிய நாடகப் பள்ளியின் தலைவராக பரேஷ் ராவல் நியமிக்கப்பட்டுள்ளார். [6]

தன்னாட்சி நிறுவனம்

தொகு

1975ஆம் ஆண்டில் இது ஒரு தன்னாட்சி அமைப்பாக மாறியது. முந்தைய கல்வி அமைச்சகம் மற்றும் கலாச்சார அமைச்சகம், கலாச்சாரத் துறை, ஆகியவற்றின் மூலம்'தேசிய நாடகப் பள்ளி' என்ற பெயருடன், மே 1975இல் இடமாற்றம் செய்யப்பட்டது. [4]

பாரத் ரங் மகோத்சவம்

தொகு

1999 ஆம் ஆண்டில், பள்ளி 'பாரத் ரங் மகோத்சவம்' என்ற அதன் முதல் தேசிய நாடக விழாவை ஏற்பாடு செய்தது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சனவரி இரண்டாவது வாரத்தில் விழா நடைபெறுகிறது. 2008ஆம் ஆண்டில், நிறுவனம் தனது வருடாந்திர நாடக விழாவான 'பாரத் ரங் மகோத்சவத்தை' நாடு முழுவதிலுமிருந்து அதன் முன்னாள் மாணவர்களை வரவழைத்தது. [7] மும்பையில் நடந்த திருவிழாவின் செயற்கைக்கோள் பதிப்பில், இரத்தன் தியாமின் முன்னுரை, பன்சி கவுல் (ஆரண்யாதிபதி தாந்தியா), நீலம் மான்சிங் சவுத்ரி (தி சூட்), சஞ்சய் உபாத்யாய் (ஹர்சிங்கர்), பஹருல் இஸ்லாம் (ஆகாஷ்), மோகன் மகரிஷ் மற்றும் எம்.கே.ரெய்னா ( ஸ்டே எட் வொயில்) போன்றவர்களின் நாடகங்களைக் காண்பித்தது. வாமன் கேந்திரே 2013ஆம் ஆண்டில் பள்ளியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் ஐந்தாண்டு காலத்திற்கு பணி புரிந்தார். [8]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Training – National School of DramaThe Columbia encyclopedia of modern drama, by Gabrielle H. Cody, Evert Sprinchorn. Columbia University Press, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-14422-9. Page 766.
  2. "PMO wants deemed varsity tag for NSD, institute disagrees". 8 August 2016.
  3. National School of Drama ..over the past 50 years The Tribune 15 March 2009.
  4. 4.0 4.1 4.2 NSD Genesis பரணிடப்பட்டது 18 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம் NSD website
  5. National School of Drama The World Encyclopedia of Contemporary Theatre: Asia/Pacific, by Don Rubin. Published by Taylor & Francis, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-26087-6. Page 168.
  6. "Paresh Rawal appointed as chief of National School of Drama". Hindustan Times (in ஆங்கிலம்). 10 September 2020. பார்க்கப்பட்ட நாள் 10 September 2020.
  7. National School of Drama celebrates golden jubilee in style தி எகனாமிக் டைம்ஸ், 12 January 2008.
  8. "Paresh Rawal appointed as chief of National School of Drama". Hindustan Times (in ஆங்கிலம்). 10 September 2020. பார்க்கப்பட்ட நாள் 10 September 2020.
  9. "Anupam Kher: My ups and downs have taught me about life". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/anupam-kher-my-ups-and-downs-have-taught-me-about-life/articleshow/64320596.cms. 
  10. "I would never leave Bollywood as my Base: Irrfan Khan". The New Indian Express. http://www.newindianexpress.com/magazine/2017/nov/04/i-would-never-leave-bollywood-as-my-base-irrfan-khan-1690528.html. 
  11. "Acting is learnt, not taught: Naseeruddin Shah". Hindustan Times. https://www.hindustantimes.com/bollywood/acting-is-learnt-not-taught-naseeruddin-shah/story-hgeNXfx1mImjj4OhM3a3ZN.html. 
  12. "NSD Convocation: National School of Drama awards diplomas to alumni of past 10 years". Hindustan Times. 6 August 2019.

மேலும் படிக்க

தொகு
  • Rang yatra: twenty-five years of the National School of Drama Repertory Company, by National School of Drama. Published by National School of Drama, 1992.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நாடகப்_பள்ளி&oldid=3117728" இலிருந்து மீள்விக்கப்பட்டது