நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (Deemed university) இந்தியாவில் உயர்தரத்தில் கல்வி வழங்கும் கல்லூரிகள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துறைகளுக்குத் தன்னாட்சிநிலை வழங்கப்படுவதைக் குறிக்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு நிகரான என்ற இந்தத் தகுதியை பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையில் பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956இன் பிரிவு 3ன்படி இந்திய மனிதவள அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை வழங்குகிறது.[1][2]
பல்கலைக்கழக மானியக்குழு 1956ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கவும் சீர்தரத்தை நிர்ணயிக்கவும் இந்திய நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்டது. [3]
அமிர்தா விஸ்வ வித்யாபீடம், பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் மற்றும் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை இந்தியாவின் சிறந்த தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்.[4][5]
மேலோட்டம்
தொகுநிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்வித்திட்டங்கள், பாடத்திட்டங்கள் இவற்றைத் தீர்மானிக்க தன்னாட்சி பெறுவதோடு மாணவர் சேர்க்கை, கட்டணங்கள் மற்றும் மாணவர்க்கான சட்டத்திட்டங்கள் குறித்து தங்கள் விதிமுறைகளைச் செயல்படுத்தும் உரிமையும் பெறுகிறார்கள். இந்தத் தகுதி பெற்ற பல்கலைக்கழகங்கள் தரமான கல்வி நிறுவனங்களாக அறியப்படுகின்றன.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indian Institute of Space Science and Technology (IISST) Thiruvanathapuram Declared as Deemed to be University". Union Human Resource Development Ministry, Press Information Bureau. July 14, 2008.
- ↑ "IIST gets deemed university status". தி இந்து. Jul 15, 2008. Archived from the original on ஜூலை 18, 2008. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 25, 2011.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ UGC Act UGC
- ↑ "MoE, National Institute Ranking Framework (NIRF)". www.nirfindia.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
- ↑ "Careers360 Engineering Ranking 2021: Eight IITs, 2 NITs Top The List". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
- ↑ நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மானியக்குழு இணையதளம்
வெளியிணைப்புகள்
தொகு- List of Deemed universities, as of 2008 University Grants Commission
- List of Deemed universities பரணிடப்பட்டது 2012-02-17 at the வந்தவழி இயந்திரம் Department of Education
- The UGC Act and the Regulations UGC website.
- நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் தரம்: அறிக்கை கோருகிறது உச்சநீதிமன்றம்