பியேத்ரிசு தின்சுலே

பியேத்ரிசு முறியல் கில் தின்சுலே (Beatrice Muriel Hill Tinsley) (27 ஜனவரி 1941 – 23 மார்ச்சு 1981) ஒரு பிரித்தானியாவில் பிறந்த நியூசிலாந்து வானியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவரது ஆய்வு பால்வெளியின் தோற்றம், படிமலர்ச்சி, இறப்பு குறித்த வானியல் புரிதலுக்கு அடிப்படை பங்களிப்புகளைச் செய்தது.

பியேத்ரிசு தின்சுலே
Beatrice Tinsley
பிறப்பு(1941-01-27)27 சனவரி 1941
செசுட்டர், இங்கிலாந்து
இறப்பு23 மார்ச்சு 1981(1981-03-23) (அகவை 40)
நியூகேவன், கனக்டிகட், அமெரிக்கா
வாழிடம்அமெரிக்கா
துறைவானியல்
பணியிடங்கள்யேல் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்காண்டர்பரி பல்கலைக்கழகம்; டெக்சாசு பல்கலைக்கழகம், ஆசுட்டீன்
அறியப்படுவதுபால்வெளி உருவாக்கமும் படிமலர்ச்சியும்
விருதுகள்அமெரிக்க வானியல் கழகம் ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது (1974)

வாழ்க்கை

தொகு

பியேத்ரிசு தின்சுலே இங்கிலாந்து செசுட்டரில் 1941 இல் ழீனுக்கும் எடுவர்டு கில்லுக்கும் மூன்றாம் மகளாகப் பிறந்தார்.[1] இவரது குடும்பம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்து முதலில் கிறித்துசர்ச்சிலும் பின் நெடுங்காலத்துக்கு நியூ பிளைமவுத்திலும் தன் தந்தையார் பாதிரியாராக இருந்த இடங்களில் வாழ்ந்துவந்தது. இவஎ நியூசிலாந்து அரசியல்வாதியும் பாதிரியாரும் அறமீட்புப் போராளியாகவும் இருந்துள்ளார். இவர் 1953 முதல்1956 வரை மேயரானார்.

கல்வி

தொகு

தின்சுலே 1962 இல் கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார்.[2]கிறித்துசர்ச்சில் படிக்கும்போதே இவர் பல்கலைக்கழக இயற்பியலாளரும் தன்வகுப்பு மாணவருமான பிறையான் தின்சுலேவை மணந்தார். இவர் தான் பல்கலைக்கழகத்தில் வேலை செய்வதைத் தவிர்க்கவே அங்கு ஏற்கெனவே வேலை செய்துவந்த அவரை மணந்தார்.[1] இவர் தனது முதுவர் ஆய்வுரையை 1962 இல் முடித்தார்.[3] இவர்கள் 1963 இல் ஐக்கிய இராச்சிய டெக்சாசில் இருந்த டெல்லாசுக்கு புலம்பெயர்ந்தனர். அங்கு பிறையான் தென்மேற்கு உயராய்வு மையத்தால் (இப்போது டெக்சாசு பலகலைக்கழகம், டெல்லாசு)பணிக்கு அமர்த்தப்பட்டார். என்றாலும், தின்சுலேவுக்கு அந்த இடச்சூழல் வெறுப்புதருவதாக அமைந்தது. ஒருமுறை பலத்தினருக்கு தேநீர் ஓம்புவதில் முரண்பாடு மூண்டது.[1] 1964 இல்லிவர் ஆசுட்டினில் இருந்த டெக்சாசு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவர் ஒருவர் மட்டுமே பெண் வானியல் மாணவராக இருந்துள்ளார். அங்கே தான் பின்னர் இவர் திருப்புமுனை ஆய்வை வெளியிட்டார்.[4]

இவரது பெருமளவில் மதித்து ஏற்பட்டிருந்தாலும் இவருக்கான நிலையான கல்விப் பதவி கிடைக்கவிலை. இவர் தன்வாழ்வில் வீடு, இருவகை வாழ்க்கைத் தொழிகலோடு மல்லுக்கு நிற்க நேர்ந்து 1974 இல் இவர், தன் கணவரையும் தத்தெடுத்த இருகுழந்தைகலையும் துறந்து யேல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பதவியில் சேரவேண்டி நேர்ந்தது.[1] இவர்1978 ஜூலை 1 அன்று அங்கே வானியல் பேராசிரியராக பணியில் அமர்த்தப்பட்டார். இவர் தான் அங்கே பணிசெய்த முதல் பெண் பேராசிரியராவார்.[5] இவர் யேல் பல்கலைக்கழகத்தில் தான் கரும்புற்றால் தாக்கப்பட்டு 1981 இல் இறக்கும்வரை பணிபுரிந்தார்ரிவர் வளாகக் க்ல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

தொழில்முறைச் செயல்பாடுகள்

தொகு

விண்மீன்களின் அகவை முதிர்வையும் அதனால் கட்புலப் பால்வெளிகளின் தரங்குறைதலையும் பற்றிய கோட்பாட்டு ஆய்வுகளை முடித்தார். மேலும், இவர் அண்டம் மூடுண்டதா திறந்துள்ளதா எனும் அண்டப் படிம அடிப்படை ஆய்விலும் இணைந்து செயல்பட்டார். இவரது பால்வெளிப் படிமங்கள் முதனிலைப் பால்வெளிகளின் தொடக்கநிலைக் காட்சியின் முதல் தோராயத்தை வெளிப்படுத்தின.

இவர் 1974 இல் இவரது பால்வெளிப் படிமலர்ச்சி ஆய்வுக்காக, அமெரிக்க வானியல் கழகம் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை வழங்கியது. விருது வழங்கல் மேற்கோள் " ஒரு பெண் முதுமுனைவர் ஆய்வாளரின் ஆய்வுக்கும் எதிர் கால ஆய்வுக்கு அவருக்குள்ள வல்லமைக்கும் வழங்கப்படுகிறது" எனக் கூறுகிறது.[6]

தின்சுலே யேல் பல்கலைக்கழக இரிச்சர்டு இலார்சனுடன் இணைந்து 'பால்வெளிகள், உடுக்கண விண்மீன்திரள்களின் படிமலர்ச்சி' எனும் பொருண்மையில் ஒரு கருத்தரங்கை ஒருங்கமைத்தார்.

இவர் 1978 ஆம் ஆண்டு தொடங்கிய குறுகிய காலத்துக்குள் யேல் பல்கலைக்கழக முதல் பெண் வானியல் பேராசிரியரானார்.[7] இவர் தன் இறப்புக்குப் பத்து நாட்களுக்கு முன்பு வானியற்பியல் இதழுக்கு அனுப்பிய ஆய்வுக் கட்டுரை திருத்தம் ஏதுமின்றி அவர் இறந்த பின்னர், நவம்பரில் வெளியிடப்பட்டது.[8][note 1]

இறப்பு

தொகு

தின்சுலே கரும்புற்றால் 1981 மார்ச்சு 23 அன்று தன் 40 ஆம் அகவையில் இறந்தார்.[1][5]

பாராட்டுகள்

தொகு
 
மனபவுரி நகர தின்சுலே மலை

அமெரிக்க வானியல் கழகம் 1986 இல் பியேத்ரிசு எம். தின்சுலே பரிசை நிறுவியது. இது " வானிலில் அல்லது வானியற்பியலில் தன்னிகரிலாத ஆக்கத்துடன் அல்லது புதம்புது பான்மையுடனான திருப்புமுனை ஆய்வுகளை மேற்கொண்ட வல்லமை" பெற்றவருக்கு வழங்கப்படுகிறது[9] இதுவே ஒரு பெண் அறிவியலாள்ரை மதிக்க இக்கழகம் ஏற்படுத்திய மிக உயர்ந்த பரிசாகும். இபாசுக்கு அவர் வாழும் நாடோ, குடியுறிமையோ ஏதும் கருதப்படமாட்டாது. .[9]

நியூசிலாந்து தனது 2019 ஆம் ஆண்டின் 1.2 அமெரிக்க டாலர் அஞ்சல் தலையை நியூசிலாந்து விண்வெளி முன்னோடிகளின் வரிசையில் வெளியிட்டு மதிப்பு பாராட்டியது her.[10]

நியூசிலாந்து புவிப்பரப்பியல் வாரியம் 2010 திசம்பரில் பியோர்லாந்து கெப்ளர் மலையை(முன்பு யோகான்னசு கெப்ளரின் நினைவாகப் பெய்ர் சூட்டப்பட்ட மலை) தின்சுலே மலை எனப் பெயர் மாற்றி இவரைப் போற்றியது.[11][12]

நியூசிலாந்து அரசு வானியல் கழகம் பியேத்ரிசு கில் தின்சுலே விரிவுரைகளை 2012 இல் நிறுவியது.[13].

வெளியீடுகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. The editor's note: "Deceased on 1981 March 23, thus ending prematurely a distinguished career. The text of this last paper was not revised, although Michele Kaufman kindly added some clarifying definitions and comments."

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Overlooked No More: Beatrice Tinsley, Astronomer Who Saw the Course of the Universe". The New York Times. 18 July 2018. https://www.nytimes.com/2018/07/18/obituaries/overlooked-beatrice-tinsley-astronomer.html. 
  2. Tinsley, Beatrice M. (1962) (in en). Theory of the crystal field in neodymium magnesium nitrate.. doi:10.26021/7553. http://hdl.handle.net/10092/2222. 
  3. Tinsley, Beatrice (1962). Theory of the crystal field in neodymium magnesium nitrate (Masters thesis). UC Research Repository, University of Canterbury. எண்ணிம ஆவணச் சுட்டி:10.26021/7553. hdl:10092/2222.
  4. "This Astronomer Had to Make the Hardest Career Choice". American Association of University Women. 16 July 2014. Archived from the original on 13 February 2019. பார்க்கப்பட்ட நாள் 19 July 2018.
  5. 5.0 5.1 "Beatrice Tinsley made professor of astronomy at Yale". nzhistory.govt.nz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
  6. "AAS Annie J. Cannon Award in Astronomy". Archived from the original on 2 October 2009. பார்க்கப்பட்ட நாள் 18 November 2009.
  7. "The Life of Beatrice Tinsley". Archived from the original on 25 March 2017. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
  8. Tinsley, B.M. (1981). "Chemical evolution in the solar neighborhood. IV – Some revised general equations and a specific model". Astrophysical Journal 250: 758–768. doi:10.1086/159425. Bibcode: 1981ApJ...250..758T. 
  9. 9.0 9.1 "Beatrice M. Tinsley Prize". American Astronomical Society. Archived from the original on 22 December 2010. பார்க்கப்பட்ட நாள் 18 November 2009.
  10. https://cdn11.bigcommerce.com/s-364g6nmu99/product_images/uploaded_images/2019-space-pioneers-stamp-1.20a.png?t=1618966532 வார்ப்புரு:Bare URL image
  11. "Mount Pickering and Mount Tinsley". Archived from the original on 15 December 2009. பார்க்கப்பட்ட நாள் 18 November 2009.
  12. Mackay, Scot (20 January 2011). "Historian's mountainous goal reached". The Southland Times. பார்க்கப்பட்ட நாள் 25 January 2011.
  13. "The Beatrice Hill Tinsley Lectures". Archived from the original on 28 July 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2013.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

பிற வாழ்க்கை வரலாறுகள்:

Other material:

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியேத்ரிசு_தின்சுலே&oldid=4071966" இலிருந்து மீள்விக்கப்பட்டது