பிரகாஷ் கவுர்

பிரகாஷ் கவுர் ( Parkash Kaur) (பிறப்பு: 1919 செப்டம்பர் 19 - இறப்பு: 1982 நவம்பர் 2) இவர் ஓர் பஞ்சாபி பாடகராவார். இவர் முக்கியமாக பஞ்சாபி நாட்டுப்புற பாடல்களைப் பாடியுள்ளார். தனது சகோதரி சுரிந்தர் கவுருடன் சேர்ந்து, இந்த வகையை முன்னோடியாகவும் பிரபலப்படுத்தியதற்காகவும் இவர் பாராட்டப்பட்டார். பிரகாஷ் கவுர் பஷ்தூ நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கவுர் பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த லாகூரில் ஒரு பஞ்சாபி - சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். இவர், பிரபல பஞ்சாபி பாடகரும், பாடலாசிரியருமான சுரிந்தர் கவுரின் மூத்த சகோதரி ஆவார்.

தொழில்

தொகு

1941 ஆம் ஆண்டில் 'பெஷாவர் வானொலியில்' ஒரு நேரடி நிகழ்ச்சியில் கவுர் அறிமுகமானார். பின்னர் 1934 ஆகஸ்ட் 31அன்று இவரும் இவரது தங்கை சுரிந்தர் கவுரும் எச்.எம்.வி விளம்பரத்திற்காக தாங்கள் இணைந்து பாடிய முதல் பாடலான " மாவன் 'தே தீன் ரால் பைத்தியன் " என்பதை வெளிய்ட்டனர். இந்திய துணைக் கண்டம் முழுவதும் இவ் இவர்களை பிரபலப்படுத்தியது. [2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாஷ்_கவுர்&oldid=3028853" இலிருந்து மீள்விக்கப்பட்டது