பிரசன்னா பா. வரலே

பிரசன்னா பாலச்சந்திர வரலே (Prasanna B. Varale-பிறப்பு சூன் 23,1962) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் முன்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.

பிரசன்னா பா. வரலே
நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 சனவரி 2024
பரிந்துரைப்புதனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
நியமிப்புதிரௌபதி முர்மு
தலைமை நீதிபதி கர்நாடக உயர் நீதிமன்றம்
பதவியில்
15 அக்டோபர் 2022 – 24 சனவரி 2024
பரிந்துரைப்புஉதய் உமேஷ் லலித்
நியமிப்புதிரௌபதி முர்மு
நீதிபதி பம்பாய் உயர் நீதிமன்றம்
பதவியில்
18 சூலை 2008 – 14 அக்டோபர் 2022
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதிபா பாட்டில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 சூன் 1962 (1962-06-23) (அகவை 61)
நிபானி, கருநாடகம்
முன்னாள் கல்லூரிடாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம்

இளமை

தொகு

வரலே 23 சூன் 1962 அன்று கருநாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள நிபானியில் பிறந்தார்.[1] மகாராட்டிர மாநிலம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

வரலே 1985-இல் வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்தார். 18 சூலை 2008 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 15 சூலை 2011-இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 15 அக்டோபர் 2022 அன்று கருநாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். வரலே 25 சனவரி 2024 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "HON'BLE THE CHIEF JUSTICE AND JUDGES". High Court of Karnataka Official Website. பார்க்கப்பட்ட நாள் 5 November 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசன்னா_பா._வரலே&oldid=3968074" இலிருந்து மீள்விக்கப்பட்டது