பிரசாந்தா பெஹெரா
பிரசாந்தா பெகெரா (Prasanta Behera) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். [1] ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டத்திலுள்ள சாலிப்பூர் தொகுதியில் வெற்றி பெற்று 2019 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். [2][3]
பிரசாந்தா பெகெரா | |
---|---|
உறுப்பினா்: ஒடிசா சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஏப்ரல் 2019 | |
முன்னையவர் | பிரகாசு சந்திர பெகெரா |
தொகுதி | சாலிப்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரசாந்தா பெகெரா 1 மே 1977 சவுத்வார், ஒடிசா, இந்தியா |
அரசியல் கட்சி | பிஜு ஜனதா தளம் கட்சி வேட்பாளர் |
துணைவர் | சுபாசினி பெகெரா |
பிள்ளைகள் | ஒரு மகன் |
பெற்றோர் |
|
கல்வி | இளநிலை அறிவியல் |
தொழில் | அரசியல்வாதி, சமூக சேவகா் |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுபிரசாந்தா பெகெரா 1977 ஆம் ஆண்டு கோபால் என்ற யாதவர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை தர்மநந்தா பெகெரா ஒரு மூத்த அரசியல்வாதியும் ஒடிசா மாநிலத்தின் கட்டக் மாவட்டம் சவுத்வார் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கட்டக் நகரிலுள்ள கமலகாந்த வித்யாபீடத்தில் பள்ளிக் கல்வியும், சவுத்வார் கல்லூரியில் அறிவியலில் இளங்கலை பட்டமும் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
தொகு2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர் சாலிப்பூர் தொகுதியின் பிஜு ஜனதா தள வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்ட பிரகாசு சந்திர பெகெராவிடம் 2117 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். [4]
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரகாசு சந்திர பெகெராவை விட அதிகமான வாக்குகளைப் பெற்று பிரசாந்தா பெகெரா வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ ADR (2013-07-19). "Prasanta Behera(BJD):Constituency- SALIPUR(CUTTACK) - Affidavit Information of Candidate:". MyNeta. பார்க்கப்பட்ட நாள் 2020-07-26.
- ↑ "Public Representatives - India". District Cuttack , Government of Odisha. 2018-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-07-26.
- ↑ "Salipur Assembly Election Results 2019 Live: Salipur Constituency (Seat) Election Results, Live News". News18. 2019-04-29. பார்க்கப்பட்ட நாள் 2020-07-26.
- ↑ "Orissa Assembly Election Results in 2014". Elections in India, India Election 2020, India Election Updates 2020. 2020-04-29. பார்க்கப்பட்ட நாள் 2020-07-27.