பிரசேர்டு நா நகரா

தாய்லாந்து நாட்டின் வரலாற்றாசிரியர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்

பிரசேர்டு நா நகரா (Prasert na Nagara) ( தாய் மொழி: ประเสริฐ ณ นคร ,RTGS: பிரசோத் நா நகோன்), தாய்லாந்து நாட்டினைச் சேர்ந்த அறிஞர் ஆவார்.[1] இவர் 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி பிறந்தார். பண்டைய தாய் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வுகளுக்கு மிகவும் பிரபலமானவர் ஆவார். இவர் பொறியியல் மற்றும் புள்ளியியல் பாடங்களை பயின்றுள்ளார். இவர் கசெட்சார்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் துணைத் தலைவராகவும், பல்கலைக்கழக விவகார அமைச்சின் நிரந்தர செயலாளராகவும் பணியாற்றினார். வரலாறு, தொல்லியல் மற்றும் மொழியியல் ஆகியவற்றில் இவரது செல்வாக்கு மிக்க பணிகளில் சுகோத்தாய் இராச்சியத்தின் வரலாறு மற்றும் தாய்மொழி குடும்பத்தின் அமைப்பு ஆகியவை அடங்கும். இவர் 2019ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி இறந்தார்.[2]

பிரசேர்டு நா நகரா

மேற்கோள்கள்

தொகு
  1. ไทยรัฐออนไลน์ (2019-05-07). "ลูกศิษย์กราบลา ศ. ดร.ประเสริฐ ณ นคร ราชบัณฑิต ถึงแก่อนิจกรรมด้วยโรคชรา". ไทยรัฐ (in தாய்). Bangkok: วัชรพล. பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.
  2. "ศาสตราจารย์ ดร.ประเสริฐ ณ นคร". นิทรรศการงานวิจัย 60 ปี มหาวิทยาลัยเกษตรศาสตร์ พัฒนาคน พัฒนาชาติ ศาสตร์แห่งแผ่นดิน (in தாய்). Kasetsart University. பார்க்கப்பட்ட நாள் 9 February 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசேர்டு_நா_நகரா&oldid=3768105" இலிருந்து மீள்விக்கப்பட்டது