பிரச்சாமோகன் மொகந்தி

இந்திய அரசியல்வாதி

பிரச்சாமோகன் மொகந்தி (Brajamohan Mohanty) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1924 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா சட்டமன்றத்தில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,  இரண்டு முறை மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1967, 1971 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தல்களில் இவர் முறையே பிரம்மகிரி மற்றும் பூரி சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 4, 5 மற்றும் 6 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில், பூரி மக்களவைத் தொகுதியிலிருந்து முறையே 7ஆவது மற்றும் 8ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

பிரச்சாமோகன் மொகந்தி
Brajmohan Mohanty
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1980–1989
முன்னையவர்பத்மாச்சரண் சமந்தசிங்கர்
பின்னவர்நீலமணி ரௌத்ரே
தொகுதிபூரி மக்களவைத் தொகுதி, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-12-23)23 திசம்பர் 1924
பாரிமந்தா, பூரி மாவட்டம் , ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு24 சூலை 1999(1999-07-24) (அகவை 74)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பிரமிளா மொகந்தி
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. Rajya Sabha (1982). Parliamentary Debates. p. 171. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
  2. India. Parliament. Lok Sabha (1986). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 251. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
  3. Sir Stanley Reed (1976). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 731. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரச்சாமோகன்_மொகந்தி&oldid=3818899" இலிருந்து மீள்விக்கப்பட்டது