பிரடெரிக் பொல்லன்
பிரடெரிக் பொல்லன் (Frederick Pollen) இந்தியாவின் மீரட் பகுதியில் இருந்த புலந்தசகர் மாவட்டத்தில் பிரித்தானிய மாவட்ட ஆட்சியராக இருந்தார். 1847 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். டப்ளின் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த இவர், 1867 ஆம் ஆண்டில் இந்தியக் குடிமைப் பணி தேர்வை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று 13 ஆவது இடத்தைப் பிடித்தார்.[1] 1869 ஆம் ஆண்டில் இவர் மீரட் உதவி நீதிபதியாகவும், ஆட்சியராகவும் இருந்தார்.[2] எமிலி சார்லோட்டு என்பவரை மணந்து கொண்டார். [3] புலந்தசகரின் பழைய [[மாவட்ட விவரச்சுவடி|மாவட்ட செய்தி இதழில் பெரும்பாலும் இவரது பணிகள் குறித்த செய்திகளாகவே இருந்துள்ளன. இராசா லட்சுமன் சிங் பற்றிய செய்திகளும் இவ்விதழில் இடம்பெற்றிருந்தன. [4] பொல்லன் 1876 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதியன்று தனது 29 வயதில் புலந்தசகரில் இறந்தார்.[5][6]
பிரடெரிக் போலன் Frederick Pollen | |
---|---|
பிறப்பு | 1847 |
இறப்பு | 11 பிப்ரவரி 1876 புலந்தசகர், இந்தியா |
பணி | மாவட்ட ஆட்சித்தலைவர் புலந்தசகர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of successful candidates at the examination for the Indian Civil Service and Home Civil Service (First Class)". Trinity College, Dublin, Ireland Calendar. Vol. III. Dublin: Hodges, Figgis & Co. 1836–1951. p. 23.
- ↑ Hart's Annual Army List, Militia List, and Imperial Yeomanry List (in ஆங்கிலம்). J. Murray. 1871. p. 30.
- ↑ Burke, Bernard; Fox-Davies, Arthur Charles (1912). A genealogical and heraldic history of the landed gentry of Ireland (in ஆங்கிலம்). Dalcassian Publishing Company. p. 98.
- ↑ Nevill, H. R. (1903). Bulandshahr: A Gazetteer. Allahabad: Government Press. pp. preface, 128.
- ↑ Allen's Indian mail and register of intelligence for British and foreign India: 1876,1/6 (in ஆங்கிலம்). 1876. p. 254.
- ↑ Pollock, John Charles (1958). Shadows Fall Apart: The Story of the Zenana Bible and Medical Mission (in ஆங்கிலம்). Hodder and Stoughton. pp. 103–108.