பிரத்யோத் குமார் தாகூர்

மகாராஜா பகதூர் சர் பிரத்யோத் குமார் தாகூர் ( Sir Prodyot Coomar Tagore) (1873 செப்டம்பர் 17 - 1942 ஆகத்து 28) இவர் இந்தியாவின் கொல்கத்தாவில் ஒரு முன்னணி நில உரிமையாளரும், தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டவரும், கலை சேகரிப்பாளரும் மற்றும் புகைப்படக் கலைஞரும் ஆவார். இவர் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த பாதுரியகட்டா கிளையைச் சேர்ந்தவர்.

Sir Prodyot Coomar Tagore by G.P. Jacomb-Hood, 1927
சர் பிரதியோத் குமார் தாகூரின் உருவப்படம் - ஜி.பி. ஜாகோம்ப்-ஹூட், 1927

பிரதியோத் குமார் தாகூர், 1891 ஆம் ஆண்டில் மகாராஜா பகதூர் என்ற பரம்பரை பட்டத்துடன் கௌரவிக்கப்பட்ட சர் ஜதிந்திரமோகன் தாகூரின் (1831-1908) மூத்த மகனும் வாரிசுமாவார். ஜதிந்திரமோகனைப் போலவே, இவரும் தத்தெடுக்கப்பட்டார். இவரது உயிரியல் தந்தையான சௌரிந்திர மோகன் தாகூர் (1840-1915), ஜதிந்திரமோகனின் சகோதராவார். [1]

கலை மற்றும் புகைப்படம் எடுத்தல்

தொகு

1803இல் கொல்கத்தாவுக்கு வருகை புரிந்த பிரிட்டிசு கலைஞர் ஜார்ஜ் சின்னரியின் உதவியுடன் தாகூர் குடும்பத்தின் கலைத் தொகுப்பை பிரதியோத் குமார் தாகூர் பெரிய தாத்தா கோபி மோகன் தாகூர் தொடங்கினார். [2] பிரதியோத் குமார் தாகூர் அந்தச் சேகரிப்பை பெரிதும் விரிவுபடுத்தினார். இவரது மரணத்தின் போது இது இந்தியாவில் ஐரோப்பிய கலைகளின் மிகப்பெரிய தொகுப்பாக இருந்தது. வான் டிக், பீட்டர் பவுல் ரூபென்ஸ், கான்ஸ்டபிள், வெரோனீஸ் மற்றும் முரில்லோ மற்றும் பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கொல்கத்தாவில் தீவிரமாக செயல்பட்ட பிரிட்டிசு ஓவியர்கள், ஜாகோம்ப்-ஹூட், சின்னரி மற்றும் தாமஸ் டேனியல் போன்றவர்கள் தாகூர் அரண்மனைகளின் சுவர்களை அலங்கரித்தனர். பிற்கால வாழ்க்கையில், கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவு மாளிகையின் புதிய சேகரிப்பிற்கு ஓவியங்களின் விரிவான தொகுப்புகளை பிரதியோத் குமார் தாகூர் நன்கொடையாக வழங்கினார். [3]

ஒரு சேகரிப்பாளராக மட்டுமல்லாமல், பிரதியோத் குமார் தாகூர் ஒரு தீவிர புரவலராகவும் மற்றும் கலைஞராகவும் இருந்தார். இவர் ஒரு தீவிர புகைப்படக்காரராகவும் இருந்தார். மேலும், 1898 ஆம் ஆண்டில் பிரிட்டிசு அரச புகைப்படச் சங்கத்தின் சக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார். [4] இவர் தனது தாகூர் கோட்டை இல்லத்தில் ஒரு அரங்கத்தை பராமரித்து, காட்சிக்கு வைத்தார். இவர் கொல்கத்தா, நுண்கலைகள் கழகத்தின் நிறுவனராகவும் மற்றும் அதன் முதல் தலைவராகவும் இருந்தார். மேலும், இந்திய அருங்காட்சியகத்தின் அறங்காவலராகவும் மற்றும் அதன் தலைவராகவும், அரச ஆசியச் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார் .

பொது வாழ்க்கை

தொகு

மகாராஜா பிரதியோத் குமார் தாகூர் பொது வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருந்தார். கொல்கத்தா மாநகராட்ட்சியின் ஆணையாளராகவும், மயோ மருத்துவமனையின் ஆளுநராகவும், வங்காள சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [5] 1899 முதல் 1911 வரை, இவர் பிரிட்டிசு இந்திய சங்கத்தின் செயலாளராக இருந்தார். இது செல்வந்த நில உரிமையாளர்களின் அமைப்பாகும். இது அவர்களின் சொந்த மற்றும் இந்திய நலன்களை பொதுவாக பிரிட்டிசு நிர்வாகத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்தியது. [6]

1902 ஆம் ஆண்டில் ஏழாம் எட்வர்ட்டின் முடிசூட்டு விழாவில் பிரதியோத் குமார் தாகூர் கொல்கத்தா நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள பதினைந்து "பிரிட்டிசு இந்திய மாகாணங்களின் இந்திய பிரதிநிதிகளில்" ஒருவராகச் சென்றார். 1905 இல் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவுக்கு வருகை புரிந்தபோது, தாகூர் ஏகாதிபத்திய வரவேற்புக் குழுவின் செயலாளராக இருந்தார். கொல்கத்தாவில் அரசருக்கு விரிவான ஒரு வரவேற்பு விருந்தளித்தார்.

தாகூர்கள் கொல்கத்தா மற்றும் பிற இடங்களில் ஏராளமான அரண்மனைகளை கட்டினர். பிரதியோத் குமார் தாகூர் தனது நேரத்தை தாகூர் கோட்டையில் கழித்தார். இது ஐரோப்பிய அரண்மனைகளின் கற்பனையான சாயல்; அருகிலுள்ள பிரசாத், இப்போது ஐக்கிய நாடுகள் சபையால் பயன்படுத்தப்படுகிறது; மற்றும் இப்போது ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான எமரால்டு போவர்.  

இறப்பு

தொகு

பிரதியோத் குமார் தாகூர் 1942 ஆகத்து 28, அன்று வாரணாசியில் இறந்தார்.  

குறிப்புகள்

தொகு
  1. Campbell, A. Claude (2003). Glimpses of Bengal: A Comprehensive, Archaeological. Biographical and Pictorial History of Bengal, Behar and Orissa, Calcutta. Vol. vol. 2. New Delhi: Sunddep Prakashan. p. 180. {{cite book}}: |volume= has extra text (help)
  2. Prodyot Coomar Tagore, Catalogue of the Pictures and Sculptures in the Collection of the Maharajah Tagore, Thacker, Spink Calcutta, 1905, i.
  3. Philippa Vaughan, editor, The Victoria Memorial Hall, Calcutta, Marg Publications Mumbai 1997 pages 62, 63.
  4. Sarker, Nikhil (1990). Calcutta: The Living City. Vol. Volume I: The Past. Oxford University Press. p. 131. {{cite book}}: |volume= has extra text (help)
  5. Who Was Who, 1941-1950, A & C Black, London 1981.
  6. Sandip Tagore, Peopled Azimuth: Reminiscences and Reflections of an Indian in Japan, New Delhi, 1987, page 20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரத்யோத்_குமார்_தாகூர்&oldid=2991532" இலிருந்து மீள்விக்கப்பட்டது