பிரபாவதி கணேசன்
பிரபாவதி கணேசன் (Prabhavathi Ganesan 15 சனவரி 1941 -17 பெப்ரவரி 2021) என்பவர் இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீணை இசைக் கலைஞர், வீணை ஆசிரியர் ஆவார்.[1]
15 சனவரி 1941 அன்று பிறந்த பிரபாவதி தன் பத்து வயதிலேயே வீணை சிட்டிபாபுவிடம் குருகுல முறைப்படி வீணை இசையை கற்கத் துவங்கினார். பின்னர் லால்குடி ஜெயராமன், டி. கே. ஜெயராமன் என பலரிடம் இசை பயின்னு 16 வயதில் அரங்கேற்றம் கண்டார். அனைத்திந்திய வானொலி நிலையம், தூர்தர்சன் போன்றவற்றின் அங்கிகாரம் பெற்ற கலைஞராக இவர் விளங்கினார். இவர் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பல ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரியா என உலகின் பல பகுதிகளில் உள்ள மேடைகளில் தன் இசையை ஒலித்துள்ளார். இவர் இந்தியா, இலங்கை தமிழர்கள் பலருக்கு வீணை கற்பித்துள்ளார். பொதுவாக வீணைக் கலைஞர்கள் அரங்கில் வயலின், புல்லாங்குழல் போன்ற பக்கவாத்தியங்கள் வாசிப்பதினூடே வாசிப்பர். பிரபாவதி பக்கவாத்தியங்களைக் கொண்டிருந்தாலும் தனித்தே வாசிப்பார் வாத்தியங்கள் 'தனி' வாசிக்கும்போது விரங்களுக்கு ஓய்வளிப்பார். இவர் குறித்து இசை விமர்சகர் சாருகேசி ராகம் தானம் பல்லவி ஒரு வீணைக் கலைஞரின் திறமையை, பெருமையைப் பளிச்சிட வைக்கும். பிரபாவதி நேர்த்தியான வாசிப்பும் ஆழமான பாடாந்தரமும் கொண்ட கலைஞர். என்று குறிப்பிட்டுள்ளார். அம்பா ஜனனி, சோல் ஆப் வீணா, கிருஷ்ண காணம் போன்ற இவரது இசைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.[2]
விருதுகள்
தொகு- தமிழக அரசின் கலைமாமணி விருது
- மியூசிக் அகாடமியின் சிறந்த மூத்த விணைக் கலைஞர் விருது