பிரபாவதி தேவி

இந்திய சுதந்திர ஆர்வலர்

பிரபாவதி தேவி நாராயண் ( Prabhavati Devi Narayan; 1904 - 15 ஏப்ரல் 1973) இன்றைய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய சுதந்திர ஆர்வலரும் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் மனைவியும் ஆவார்.

பிரபாவதி தேவி நாராயண்
பிறப்புபிரபாவதி தேவி பிரசாத்
1904 (1904)
சிறீநகர், சரண் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போதைய சீவான் மாவட்டம், பீகார், இந்தியா)
இறப்பு15 ஏப்ரல் 1973(1973-04-15) (அகவை 68–69)
பட்னா, பீகார், இந்தியா
தேசியம்இந்தியர்
வாழ்க்கைத்
துணை
ஜெயபிரகாஷ் நாராயண்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்

தொகு

பிரபாவதி பிரபல வழக்கறிஞரான பிரஜ்கிஷோர் பிரசாத் மற்றும் பூல் தேவி ஆகியோருக்கு பீகாரில் உள்ள சீவான் மாவட்டத்தில் பிறந்தார். ஒரு தீவிர காந்தியவாதியான பிரஜ்கிஷோர் பிரசாத் பீகாரில் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணிக்க ஒரு இலாபகரமான தனது சட்ட நடைமுறையை கைவிட்ட முதல் காங்கிரசு கட்சி உறுப்பினராக இருந்தார். பிரபாவதி தனது 16 வயதில் ஜெயப்பிரகாஷ் நாராயணை 1920 அக்டோபரில் திருமணம் செய்து கொண்டார்.[1]

திருமணத்திற்குப் பிறகு, ஜெயபிரகாஷ் நாராயண் கலிபோர்னியாவில் அறிவியல் படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். ஆனால் அதற்கு பதிலாக விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மார்க்சிசம் படிக்க சேர்ந்தார். அந்த காலகட்டத்தில் பிரபாவதி காந்தியின் ஆசிரமத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி இவரை தனது மகளாக கருதத் தொடங்கினார்.[2]:240

இவரது கணவர் திரும்பி வந்தபோது, பிரபாவதி ஒரு புரட்சியாளராக மாறியிருந்தார். இது இவரது காந்திய நோக்குநிலை காரணமாக அவருடன் பல வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது. மகாத்மா காந்தி பிரம்மச்சரியமாக இருப்பதற்கான பிரபாவதியை கேட்டுக் கொண்டார். மகாத்மா காந்தியின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த பிரபாவதி, அவரது சர்ச்சைக்குரிய பிரம்மச்சரிய சோதனைகளில் பங்கேற்ற பெண்களில் ஒருவர்.[3] ஆயினும்கூட, தம்பதியினர் ஒருவருக்கொருவர் மதித்து, நாடு வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபடும் வரை குழந்தை பெற வேண்டாம் என்று கூட்டாக முடிவு செய்த்தானிய காலனித்துவ அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேரு குடும்பத்துடன் நட்புறவு

தொகு

ஜவகர்லால் நேருவின் மனைவி கமலா நேருவுடன் மிக நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்ட பிரபாவதி, அவரது நம்பிக்கைக்குரியவராக ஆனார். கமலா இவருக்கு பல தனிப்பட்ட கடிதங்களை எழுதினார். பெரும்பாலான கடிதங்கள் கமலா காந்தியின் மகள் இந்திரா காந்தியைப் பற்றியதாக இருந்தது. பிரபாவதியின் மரணத்தைத் தொடர்ந்து ஜெயப்பிரகாஷ் இக்கடிதங்களை திருப்பி அனுப்பினார்.[4]

இந்திய சுதந்திரத்திற்குப் பிந்தைய வாழ்க்கை

தொகு

இவரது செல்வாக்கின் கீழ் தான் ஜெயப்பிரகாஷ் சர்வோதயம் இயக்கத்தில் சேர்ந்து வடகிழக்கு இந்தியா மற்றும் மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்றார். காந்திய மாதிரியில் நூற்புச் சக்கர இயக்கத்தில் கைவிடப்பட்ட மற்றும் கைம்பெண்களை ஈடுபடுத்த பட்னா மகிளா சர்கா சமிதியை நிறுவினார்.

பிற்கால வாழ்க்கை மற்றும் மரணம்

தொகு

மேம்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்ட [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Vaidya, Prem. "Jayaprakash Narayan — Keeper of India's Conscience". LiberalsIndia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-16.
  2. 2.0 2.1 Sandip Das (2005), Jayaprakash Narayan: A Centenary Volume, Mittal Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-001-7
  3. Lal, Vinay (2000). "Nakedness, Nonviolence, and Brahmacharya: Gandhi's Experiments in Celibate Sexuality". Journal of the History of Sexuality 9 (1/2): 105–136. பன்னாட்டுத் தர தொடர் எண்:1043-4070. https://www.jstor.org/stable/3704634. 
  4. "That family feeling". Hindustan Times (in ஆங்கிலம்). 2010-10-24. பார்க்கப்பட்ட நாள் 2021-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாவதி_தேவி&oldid=4002851" இலிருந்து மீள்விக்கப்பட்டது