பிரபுலிங்கலீலை

பிரபுலிங்கலீலை வீரசைவ சமயக் காப்பியம் ஆகும். இது கன்னடத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூலகும். கற்பனைக்களஞ்சியம் என அழைக்கப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இதை மொழி பெயர்த்தவர்.

பிரபுலிங்கலீலை கன்னடம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மகாராஷ்டிரம் முதலான வேறு பல மொழிகளிலும் இயற்றப்பட்டுள்ளது எனினும் கன்னடத்தில் இயற்றப்பட்ட பிரபுலிங்கலீலை நூலே முதலாவதானதாகக் கூறப்படுகின்றது.[1]

சிவப்பிரகாசரின் தமிழ் பிரபுலிங்கலீலை நூலுக்கும் பிறமொழி பிரபுலிங்கலீலை நூல்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. சிவப்பிரகாசரின் பிரபுலிங்கலீலை 25 கதி மற்றும் 1159 பாடல் கொண்டது. [1]

19-ஆம் நூற்றாண்டு உரையாசிரியரான சரவணப் பெருமாள் ஐயர் இந்நூலுக்கு உரை இயற்றத் தொடங்கி முழுவதும் நிறைவு செய்யாமலேயே மறைந்தார்.[2]

2013ஆம் ஆண்டு மயிலம் பொம்மபுர ஆதீனம் இந்நூலை உரையோடு வெளியிட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 http://www.dinamani.com/book_reviews/2013/11/04/பிரபுலிங்கலீலை-மூலமும்-உரை/article1870720.ece
  2. "தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி". பார்க்கப்பட்ட நாள் April 24, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபுலிங்கலீலை&oldid=2922887" இலிருந்து மீள்விக்கப்பட்டது