பிரமிளா கிரி

இந்திய அரசியல்வாதி

பிரமிளா கிரி (Pramila Giri) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1957 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியில் இவர் உறுப்பினராக இருந்தார். 2004 ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பைசிங்காவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக பிரமிளா கிரி பணியாற்றினார்.[1] பிரமிளாவுக்கு ஒடியா, ஆங்கிலம், இந்தி, பெங்காலி, அசாமி மற்றும் குசராத்தி மொழிகள் தெரியும். 2009 ஆம் ஆண்டில் பிரமிளாகிரி பாரதிய சனதா கட்சியிலிருந்து விலகி பிச்சூ சனதா தளம் கட்சியில் சேர்ந்தார்

பிரமிளா கிரி
Pramila Giri
உறுப்பினர்: ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
மே 2004 – மே 2009
முன்னையவர்கந்தரா சோரென்
தொகுதிபைசிங்கா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரமிளா கிரி

1 சனவரி 1957 (1957-01-01) (அகவை 67)
மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, இந்தியா
அரசியல் கட்சிபிச்சூ சனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய சனதா கட்சி
கல்விஇளங்கலை
தொழில்அரசியல்வாதி

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பிரமிளா கிரி பைசிங்கா, மயூர்பஞ்ச் என்ற இடத்தில் இந்து கோபால் ( யாதவ் ) குடும்பத்தில் பிறந்தார். [2] [3]

மேற்கோள்கள்

தொகு
  1. ADR. "Pramila Giri(Independent(IND)):Constituency- Baisinga(Orissa) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
  2. Bureau. "BJD leader arrested on fake caste certificate case". பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
  3. "MLA Pramila Giri Profile - BAISINGA Constituency". பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிளா_கிரி&oldid=3819422" இலிருந்து மீள்விக்கப்பட்டது