பிரமிளா பாட்டென்

மொரிசியசைச் சேர்ந்த சட்ட அறிஞர்

பிரமிளா பாட்டென் ( Pramila Patten) அல்லது நவமணி ரத்னா பாட்டென் ( பிறப்பு 29 ஜூன் 1958) மொரிசியசைச் சேர்ந்த சட்ட அறிஞரும் மற்றும் சர்வதேச பெண்களின் உரிமைகள் வழக்கறிஞரும் ஆவார். குடும்பச் சட்டம், பெண்ணியச் சட்டக் கோட்பாடு, சர்வதேச சட்டத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் சமயம் மற்றும் பெண்கள் ஆகியவற்றில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர். 2006 முதல் 2018 வரை பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் அவையின் குழு துணைத் தலைவராகவும் (2003-2007), ஐக்கிய நாடுகள் சபையின் துணை பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார்.[1] இலரி கிளின்டன் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு மன்றத் தீர்மானம் 1888 ஆல் இவரது அலுவலகம் நிறுவப்பட்டது. மேலும் இவர் மார்கோட் வால்ஸ்ட்ரோம் மற்றும் சைனாப் பாங்குரா ஆகியோருக்குப் பிறகு பதவியேற்றார்.

பிரமிளா பாட்டென்
2018 இல் பிரமிளா பாட்டென்
பாலியல் வன்முறை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி
பதவியில் உள்ளார்
பதவியில்
12 ஏப்ரல் 2017
முன்னையவர்சைனாப் பாங்குரா
பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான குழு உறுப்பினர்
பதவியில்
2003–2017
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 29, 1958 (1958-06-29) (அகவை 65)
பிரித்தானிய மொரிசியசு
தேசியம்மொரிசியசைச் சேர்ந்தவர்
வேலைசட்ட அறிஞர்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் மற்றும் முதுகலைச் சட்டப் படங்களைப் பெற்றார். கேம்பிரிட்சு கிங்ஸ் கல்லூரியில் குற்றவியல் பட்டயச் சான்றிதழ் பெற்றுள்ளார்.[2]

தொழில் வாழ்க்கை தொகு

பாட்டென் 1982 முதல் 1986 வரை இங்கிலாந்தில் ஒரு பாரிஸ்டராகப் பணியாற்றினார். மொரிசிசுக்குத் திரும்புவதற்கு முன்பு, 1987 முதல் 1988 வரை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும், 1987 முதல் 1992 வரை மொரிசியசு பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். 1995 முதல், இவர் சட்ட நிறுவனமான பாட்டென் & கோ சேம்பர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார்.

1993 மற்றும் 2002 க்கு இடையில் சர்வதேச மகளிர் உரிமைகள் நடவடிக்கை கண்காணிப்பகத்தின் உறுப்பினராக இருந்த பாட்டென், 2000 முதல் 2004 வரை மொரிசியசின் பாலின சமத்துவம், குழந்தைகள் மேம்பாடு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசகராக இருந்தார். [3]

2003 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் குழுவின் உறுப்பினராக பாட்டென் தேர்ந்தெடுக்கப்பட்டார். சில நேரங்களில், இவர் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டில், இவர் குழுவிலிருந்து விலகினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதிகள், 2017-தற்போது வரை தொகு

ஏப்ரல் 2017 அன்று, ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரசால் ஐக்கிய நாடுகள் அவையின் துணை பொதுச்செயலாளர் பதவியில் பாலியல் வன்முறை தொடர்பான சிறப்பு பிரதிநிதியாக பாட்டென் நியமிக்கப்பட்டார்.[1][4]

நவம்பர் 2017 இல், மியான்மரில் 2016 ரோகிங்கியா சச்சரவு காரணமாக அங்கிருந்து இருந்து தப்பியவர்களை நேர்காணல் செய்ய பாட்டென் வங்காளதேசம் சென்றார்.[5]

அதே மாதத்தில், ஐ. நா. வின் துணை பொதுச்செயலாளரும் ஐ. நா பெண்கள் நிர்வாக இயக்குநருமான பும்சில் மலம்போ-என்குகாவுடன் ஒரு கூட்டு அறிக்கையில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும் எல்ஸி முன்முயற்சியை இவர் வரவேற்றார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Ms. Pramila Patten of Mauritius – Special Representative of the Secretary-General on Sexual Violence in Conflict". United Nations Secretary-General. 12 April 2017. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
  2. "Pramila Patten". Office of Special Representative of Secretary-General on sexual violence in conflict. Archived from the original on 27 November 2020. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.
  3. "Human rights expert Pramila Patten delivered Vanderbilt 2022 Charney Distinguished Lecture in international law". Vanderbilt University. Archived from the original on 21 March 2023. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.
  4. "About the Office". www.un.org. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
  5. "UN Gathers Horror Stories from Rohingya Women Fleeing Myanmar". Voice of America. 28 December 2017. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
  6. "Joint Statement by Phumzile Mlambo Ngcuka and Pramila Patten on the launch of the Elsie Initiative". ஐ. நா. பெண்கள். 16 November 2017. பார்க்கப்பட்ட நாள் 12 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிளா_பாட்டென்&oldid=3910183" இலிருந்து மீள்விக்கப்பட்டது