பிரமிளா ராணி பிரம்மா

இந்திய அரசியல்வாதி

பிரமிளா ராணி பிரம்மா (Pramila Rani Brahma) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த போடோ அரசியல்வாதியாவார். இவர் போடோலாந்து மக்கள் முன்னணியில் இருந்து அசாம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அரசாங்கத்தில் பிரமிளா அமைச்சரானார்.

பிரமிளா ராணி பிரம்மா
Pramila Rani Brahma
அசாம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1991–2021
முன்னையவர்சரண் நர்சாரி
பின்னவர்இலாரன்சு இசுலாரி
தொகுதிகோக்ராயர் கிழக்கு தொகுதி
அசாமின் வனத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல், மண் பாதுகாப்பு, கனிம வளம் துறைகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1951
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபோடோலாந்து மக்கள் முன்னணி
முன்னாள் கல்லூரிபி.ஏ. கோக்ராயர் கல்லூரி
வேலைஅரசியல்வாதி
தொழில்சமூகப்பணியாளர்

கவுகாத்தியில் 20 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பிற்காக 1992 இல் கைது செய்யப்பட்ட பிரமிளா ராணி பிரம்மா 2014 ஆம் ஆண்டு காங்கிரசுடனான தனது உறவை முறித்துக் கொள்ளும் வரை தருண் கோகோய் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். அந்த ஆண்டு சட்டசபை தேர்தல்கள் வகுப்புவாத கலவரங்களுக்கு வழிவகுத்தன. பிரமிளா தொடர்ந்து ஆறாவது முறையாக கோக்ராஜர் கிழக்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3][4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிளா_ராணி_பிரம்மா&oldid=3235963" இலிருந்து மீள்விக்கப்பட்டது