பிரம்மரிஷி விஸ்வாமித்ரா

1948 திரைப்படம்

பிரம்மரிஷி விஷ்வாமித்திரா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜகன்னாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராம்சிங், டி. ஆர். ராஜகுமாரி[1] மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் யாத்த பாடல்களுக்கு ரீமா என்ற ஆர். வைத்தியநாதன்[2], நாராயணன் ஆகியோர் இசையமைத்திருந்தார்.[3]

பிரம்மரிஷி விஷ்வாமித்திரா
இயக்கம்ஜகன்னாத்
தயாரிப்புஜகன்னாத் புரொடக்சன்சு
இசைரீமா (ஆர். வைத்தியநாதன்)
நாராயணன்
நடிப்புகே. ஆர். ராம்சிங்
டி. வி. சேதுராமன்
புளிமூட்டை ராமசாமி
கோசல்ராம்
டி. ஈ. கிருஷ்ணமாச்சாரி
டி. ஆர். ராஜகுமாரி
என். ஆர். நளினி
டி. ஏ. மதுரம்
என். எஸ். கிருஷ்ணன்
வெளியீடு1948
ஓட்டம்.
நீளம்13678 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தன் கடுமையான தவத்தால் வலிமையானவராக மாறுகிறார் விசுவாமித்திரர் (கே. ஆர். ராம்சிங்). இதனால் அவரைக் கண்டு அச்சம் கொள்கிறான் இந்திரன். இதனால் விசுவாமித்திரரை மயக்க இந்திரன் மேனகையை (டி. ஆர். ராஜகுமாரி) அனுப்புகிறான். மேனகையின் வரவால் விசுவாமித்திரரின் தவம் கலைகிறது. இருவருக்கும் சாகுந்தலை என்ற பெண் குழந்தை பிறக்கிறது. தன் தவத்தைக் கலைத்த மேனகையை விசுவாமித்திரர் சபிக்கிறார். இதுபோல கதை செல்கிறது.

வெளியீடு

தொகு

இப்படம் 1948 இல் வெளியிடப்பட்டது. ஆனால் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் அப்போது புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்களாக இருந்த டி. ஏ. மதுரம், என். எஸ். கிருஷ்ணன் நடிப்பில் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்து மீண்டும் வெளியிட்டனர் அதன் பிறகு படம் வெற்றி பெற்றது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "ஓராயிரம் முகங்களிடையே ஒரு முகம்! டி.ஆர்.ராஜகுமாரி". தினமணி. https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/Jun/28/trrajakumari-old-actresses-3181306.html. பார்த்த நாள்: 13 December 2024. 
  2. வாமனன் நரசிம்ஹன். திரை இசைக் களஞ்சியம். மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). p. 544.
  3. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2019-07-18. பார்க்கப்பட்ட நாள் 2022-05-11.
  4. "பிரம்மரிஷி விஸ்வாமித்ரா: ரிலீஸுக்கு பிறகு காமெடி சேர்த்து ரீ-ரிலீஸ் ஆன படம்!". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2024.