பிராங்கோ சைமன்

இந்திய பாடகர்

பிராங்கோ சைமன் (Franco Simon, பிறப்பு: 7, அக்டோபர், 1974) என்பவர் ஒரு இந்திய பாடகரும், [1] கேரளத்தைச் சேர்ந்த இசையமைப்பாளரும் ஆவார். இவர் சுமார் 150 மலையாள திரைப்பட பாடல்களையும் 1500 வெவ்வேறு இசைத் தொகுப்புகளை 5 வெவ்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். இவர் பிரபல இந்திய திரைப்பட இசையமைப்பாளர் உசெப்பச்சனின் மருமகன் ஆவார். இவர் தனது இசைத் தொகுப்புகளுக்காக ஜி.எம்.எம்.ஏ விருது, பல யுவப்பிரதிப புராஸ்கர் விருதுகளையும் பெற்றவர்.

பிராங்கோ சைமன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பிராங்கோ சைமன் நீலங்கவில்
பிற பெயர்கள்பிராங்கோ
பிறப்பு7 அக்டோபர் 1974 (1974-10-07) (அகவை 49)
பிறப்பிடம்இந்திய ஒன்றியம், கேரளம், திருச்சூர்
இசை வடிவங்கள்திரை இசை, பாப், பக்தி இசை
இசைக்கருவி(கள்)குரல்
இசைத்துறையில்2000 – தற்போது வரை

வாழ்கை வரலாறு தொகு

 
மேடை நிகழ்ச்சியில் இசைக்குழு உறுப்பினர்கள் ஸ்டீபன் தேவாஸி (இடது) மற்றும் மலைக்கா அரோரா ஆகியோருடன் பிராங்கோ
 
பிராங்கோ சைமன்
 
பிராங்கோ சைமன் மேடையில் பாடுகிறார்

சைமன் என். பி மற்றும் ஆலிஸ் எம். எல் ஆகிய இணையருக்கு 7, அக்டோபர், 1974 அன்று இந்தியாவின் கேரளத்தின் திரிசூரில் பிராங்கோ சைமன் நீலங்கவில் பிறந்தார். நான்கு குழந்தைகளில் இவர் மூத்தவர். இவரது பெற்றோரின் கூற்றுப்படி, அவர் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். மேலும் மிகச் சிறிய வயதிலேயே பாடத் தொடங்கினார். இவர் 4 வயதாக இருந்தபோது முதல் முதலில் மேடையில் பாடினார். பின்னர் பல போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ளார். பிராங்கோ மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலை பட்டம் முடித்தார்.

பிராங்கோவின் முதல் திரைப்படப் பாடல் 2002 இல் நம்மல் திரைப்படத்தின் என் கரலில் (ராட்சசி) ஆகும். பிராங்கோ 2005 ஆம் ஆண்டில் ஸ்டீபன் தேவாசி, சங்கீவி பவித்ரனுடன் சேர்ந்து பேண்ட் செவன் என்ற இசைக்குழுவை உருவாக்கினார். இவர்கள் இந்திய பாப் இசையில் ஏ ஜிண்டகனி என்ற இந்தி இசைத் தொகுப்பை வெளியிட்டனர். [2] [3] கோஸ்மிக் மியூசிக்குடன் இணைந்து தெலுங்கு, கன்னடம், சமசுகிருத மொழிகளில் ஏராளமான இந்து பக்தி பாடல்களை பிராங்கோ உருவாக்கியுள்ளார். மிகவும் பிரபலமான 2006 மலையாள இசைத் தொகுப்பான செம்பகாமின் இரண்டு பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தது. இந்த இசைத் தொகுப்பு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் இருந்து. இது இவரது திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. சமசுகிருத மொழியில் இவரது கிறிஸ்தவ தியான இசைத் தொகுப்பான மோரன் அமேக் தியான இசை உலகில் தனித்துவமானது. [4]

இவர் ஹாரிஸ் ஜயராஜ், வித்தியாசாகர், டி. இமான், தேவி ஸ்ரீ பிரசாத், உசெப்பாச்சன், மோகன் சித்தாரா, மணிசர்மா, அலெக்ஸ் பால், பெர்னி-இக்னேஷியஸ், கோபி சுந்தர், ஷியாம் தர்மன், ராம் சுரேந்தர், அல்போன்ஸ் ஜோசப் ராகுல் ராஜ், பிரகாஷ் உல்யேரி, யுவன் சங்கர் ராஜா, சயன் அன்வர், ஷபீர், நடேஷ் ஷங்கர், மரகதமணி, எம். ஜெயசந்திரன், ஆர். பி. பட்நாயக், அனுப் எஸ் நாயர், போபோ ஷாஷி, மெஜோ ஜோசப், வினு தாமஸ், தேஜ் மெர்வின், அபு முரளி, மனோஜ் ஜார்ஜ், பென்னி ஜான்சன், செஜோ ஜான், பிஜிபால், கைதாபிரம் விஸ்வநாதன் போன்ற பல முன்னணி இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

பகுதி இசைத்தொகுப்பு தொகு

பாடிய மொழிகள்

  • மலையாளம்
  • தமிழ்
  • தெலுங்கு
  • இந்தி
  • ஆங்கிலம்
  • சமசுகிருதம்

மலையாள படங்களில் பிரபலமான பாடல்கள் [5]

  • ராட்சசி ( நம்மள் )
  • தும்தனக்கிடி தும்மா ( முல்லவல்லியம் தென்மாவம் )
  • பைனாப்பிள் பெண்ணே ( வெல்லிநட்சத்திரம் )
  • கனபொன்னம் தேடி ( சாந்துபொட்டு )
  • பஞ்சார சிரி கொண்டு (மேரிக்குண்டோரு குஞ்சாடு)
  • ஆவணி பப்பாதம் பூத்தல்லோ (மாய மோகினி)
  • ஜனுவரியில் (அயலம் நஜனம் தம்மில்)
  • வெள்ளி சிறகுகள் (சேப்டர்ஸ்)
  • அப்பக்கலே ( பாலிடெக்னிக் )
  • ஹை ஹை ஹைலேசா (புல்லிபுலிகாலும் அட்டின்குட்டியும்)
  • வசூட்டன் ( ஜம்னா பியாரி ) [6]
  • பம் ஹரே (டபுள் பேரல்)
  • கினவில் (பிராஞ்சியேட்டன்)
  • என்னே நினக்கின்னு பிரியமல்லே (யூத் பெஸ்டிவல்)
  • ஒத்து பிடிச்சால் (3 டாட்ஸ்)

பிரபல தமிழ்த் திரைப்பட பாடல்கள்

தெலுங்கு படங்களில் பிரபலமான பாடல்கள்

  • ரெடி
  • கரெண்ட்
  • ராகவன்
  • பிரதர்ஸ்

இந்தி திரைப்படத்தில் பிரபலமான பாடல்கள்

  • ஃப்ரீக்கி சக்ரா

ஆங்கில திரைப்படத்தில் பிரபலமான பாடல்கள்

  • டேம் 999

பிரபலமான மலையாள இசைத் தொகுப்புகள்

  • சுந்தரியே வா (மலையாள இசைத் தொகுப்பு)
  • செம்பகமே (மலையாள பாப் இசைத் தொகுப்பு)
  • அக்கர பச்ச
  • பிலிஃப் (நற்செய்தி இசைத் தொகுப்பு)
  • 4யு (பேண்ட் செவன் இசைத் தொகுப்பு)
  • யே ஜிந்தகனி (இந்தி இசைத் தொகுப்பு)

சமஸ்கிருத இசைத் தொகுப்பு

  • மோரன் அமேக் (சமசுகிருதத்தில் கிறிஸ்தவ தியான இசைத் தொகுப்பு) 2016

குறிப்புகள் தொகு

  1. http://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/Franco-on-Amrita-TV/articleshow/52278611.cms
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2002-06-15. பார்க்கப்பட்ட நாள் 2021-03-24.
  3. http://english.manoramaonline.com/entertainment/music/any-time-is-boneym-time-kochi-proves.html
  4. http://www.thehindu.com/features/friday-review/singer-franco-on-moran-amekh-an-album-of-christian-meditation-songs-in-sanskrit/article7891679.ece
  5. http://en.msidb.org/songs.php?singers=Franco&singtype=duet&tag=Search&limit=53&page_num=2
  6. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/music/I-enjoyed-penning-song-in-Thrissur-slang/articleshow/48987417.cms

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்கோ_சைமன்&oldid=3563541" இலிருந்து மீள்விக்கப்பட்டது