பிராத்தமேசு மோகல்

இந்திய சதுரங்க விளையாட்டு வீரர்

பிராத்தமேசு மோகல் (Prathamesh Mokal) ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1983 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் நாள் பிறந்தார். சதுரங்க அனைத்துலக மாசுட்டர், பிடே அமைப்பின் பயிற்சியாளர், கராத்தே விளையாட்டில் கருப்பு பட்டை வாங்கியவர் என்ற பல பெருமைகள் இவருக்கு உண்டு. சதுரங்கத்தில் இவரது சாதனைகளைப் பாராட்டி மகாராட்டிர அரசு இவருக்கு சிவ சத்ரபதி பதக்கம் வழங்கி சிறப்பித்தது. புனேயில் உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டி 2014 இல் நடந்தபோது நேரலை இணைய காணொளி வர்ணனையின் ஒரு பகுதியாக இவர் இருந்தார்[1][2][3]. மிக பிரபலமான தொழில்முறை சதுரங்க விளையாட்டு மென்பொருள் செசு பேசு 13 எனப்படும் சதுரங்க அடிப்படை 13 இன் சமீபத்திய பதிப்பை பிரதாமேசு விமர்சனம் செய்தார்[4]. இம்மென்பொருளின் சில அடிப்படை செயல்பாடுகள் சிலவற்றை விவரிக்கும் போது ஒரு பயிற்சியாளரின் பார்வையுடன் விமர்சனத்தை அளிப்பது இவருடைய சிறப்பு ஆகும். மேலும் இவர் அல் ஐன் சதுரங்கப் போட்டி குறித்து சாகர் சா எழுதிய கட்டுரைகளை சுட்டிக்காட்டியும் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்[5].

பிராத்தமேசு சுனில் மோகல்
Prathamesh Sunil Mokal
முழுப் பெயர்பிராத்தமேசு சுனில் மோகல்
நாடுIஇந்தியா
பிறப்பு1 அக்டோபர் 1983 (1983-10-01) (அகவை 41)
பூனா, மகாராட்டிரா, இந்தியா
பட்டம்அனைத்துலக சதுரங்க மாசுட்டர் (2003)
பிடே தரவுகோள்2393

சதுரங்க வாழ்வு

தொகு
  • பிடே பயுற்சியாளர் – 2012 (தேர்வில் 100% மதிப்பெண் )
  1. 2010 தாய்லாந்து சதுரங்கப் போட்டியில் 3 ஆவது இடம் [6]
  2. முதலாவது கிராண்டு மாசுட்டர் தகுதி – 2009[7][8]
  3. தேசிய போட்டியாளர்கள் போட்டியில் சாம்பியன் – 2007
  4. 6 முறை தேசிய முதன்மை சாம்பியன் – 2002 முதல் 2010
  5. பல்வேறு வயது குழுக்களில் 7 முறை மாநில சாம்பியன் – 1992 முதல் 2002
  6. அனைத்துலக மாசுட்டர் - 2003[9]
  7. பொதுநலவாய இளையோர் போட்டியில் வெண்கலம் - 2003[10]
  8. ஆசிய இளையோர் இணை சாம்பியன்- 2003.
  9. தேசிய 14 வயதுக்கு உட்பட்டோர் போட்டி – வெண்கலம், தேசிய 18 வயதுக்கு உட்பட்டோர் போட்டி – வெள்ளிப் பதக்கம்[11]

பயிற்சியாளர்

தொகு

2014 ஆம் ஆண்டு பூனேயில் [12][13] நடைபெற்ற மகாராட்டிர சதுரங்க லீக் போட்டியில் மும்பை மூவர்சு அணிக்கு இவர் பயிற்சியாளராக இருந்தார் [14][15]. 2014 ஏப்ரல், மே மாதங்களில் சிங்கப்பூரில் [16][17][18][19] நடைபெற்ற உலக தொழிற்முறை சாம்பியன் பட்டப் போட்டியில் இவருடைய மாணவி சலோனி சபேல் என்ற என்ற பெண் வெள்ளிப் பதக்கம் வென்றார் [20].

மேற்கோள்கள்

தொகு
  1. "World Junior Chess Championship 2014 - Pune - India". Worldjuniorchess2014.com. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  2. "WJCC 2014 - News". Worldjuniorchess2014.com. Archived from the original on 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  3. "World Junior 2014 in Pune starts on Monday". Chess News. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  4. "ChessBase 13 from a club trainer's perspective (1)". Chess News. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  5. "Ukrainians lead Al-Ain after three rounds". Chess News. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  6. "Mokal finishes third in Thailand Open chess tournament". Archive.indiaexpress.com. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  7. "Ganguly wins 7th Parsvnath Open in New Delhi". Chess News. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  8. "Ganguly wins Parsvnath chess title". Ia.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  9. [1]
  10. "The Hindu : Nguyen Anh Dung keeps his date with destiny". Thehinduc.om. Archived from the original on 5 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Nguyen Anh Dung corners glory". Sportstaronnet.com. Archived from the original on 17 நவம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  12. "Abhijit Kunte, Vidit Gujarathi richest picks in 2nd Maharashtra Chess League". Sportskeeda.com. 30 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  13. "Jalgaon Battlers win Maharashtra Chess League". Chess News. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  14. Maharashtra Chess Association
  15. "MCL Chess". Mcl.chess.me. Archived from the original on 23 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  16. "Chess-Results Server Chess-results.com - World Amateur Chess Championships 2014 - WOMEN". Chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  17. "This city lass loves the game of 64 squares". Dnasyndication.com. Archived from the original on 27 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  18. "Sakshi Chitlange is World Amateur Chess Champion - Drinks Break". Drinks Break. Archived from the original on 11 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  19. "Chess-Results Server Chess-results.com - World Amateur Chess Championships 2014 - WOMEN". Chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015.
  20. "FIDE World Amateur Chess Championships 2014". FIDE World Amateur Chess Championships 2014. Archived from the original on 21 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராத்தமேசு_மோகல்&oldid=3792513" இலிருந்து மீள்விக்கப்பட்டது