ஒளியியலில்பிரான்கோபர் வரிகள் (Fraunhofer lines) என்பன கதிரவனின்தொடர் நிறமாலையில் அதன் பின்புலத்தில் காணப்படும் உட்கவர் நிறமாலைக் கோடுகளாகும். நிறமாலையில் இவை கறுப்புக் கோடுகளாகக் காணப்படும். செருமானிய இயற்பியலாளர் ஃபிரான்கோபரைப் (1787-1826) பெருமைப்படுத்தும் வகையில் இக் கோடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.