பிரான்சியா மார்க்வெசு

ஆப்பிரிக்க - கொலம்பிய செயற்பாட்டாளர்

பிரான்சியா எலினா மார்க்வெசு மினா (Francia Elena Márquez Mina) கொலம்பியாவில் உள்ள ஓர் ஆப்பிரிக்க - கொலம்பிய மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். அணை கட்டுவது தனது சமூகத்தை அச்சுறுத்தியபோது 1982 ஆம் ஆண்டில் பிறந்த [1] பிரான்சியா 13 வயதிலேயே ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக உருவானார்.

படிமம்:(FranciaMárquez) F70A6326 (49199213312) (cropped).jpg
2019 ஆம் ஆண்டில் பிரான்சியா மார்க்வெசு

லா டோமா சமூகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அனைத்து சட்டவிரோத தங்கம் வெட்டும் நடவடிக்கைகளையும் தடுப்பதற்காக இவர் மேற்கொண்ட பணிகளுக்காக 2018 ஆம் ஆண்டு இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. மேலும் சட்ட விரோதமான சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய உபகரணங்களை அகற்றக் கோரி தலைநகரான பொகோட்டாவுக்கு 350 மைல் தூரம் பயணம் செய்த 80 பெண்களின் எதிர்ப்பு ஊர்வலத்தை ஏற்பாடு செய்ததும் இவ்விருதுக்கான கூடுதல் காரணமாகும்.[2][3][4] கொலம்பியாவின் காவ்கா பிராந்தியத்தில் உள்ள யோலோம்போ என்ற கிராமத்தில் பிரான்சியா பிறந்தார். இவர் சாண்டியாகோ டி கலி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Proenza, Anne (5 June 2018). "D'or et de sang, le combat de Francia Marquez pour les terres des Afro-Colombiens". Le Temps.
  2. "Francia Márquez - Goldman Environmental Foundation" (in en-US). Goldman Environmental Foundation. https://www.goldmanprize.org/recipient/francia-marquez/. 
  3. "This Woman Who Saved Her Afro-Colombian Community's Land From Miners Won Prestigious Prize" (in en-US). Remezcla. 2018-04-24. http://remezcla.com/culture/francia-marquez-afro-colombian-community-goldman-environmental-prize/. 
  4. Moloney, Anastasia (27 April 2018). "Death threats won't stop Colombian anti-mining activist" (in en-US). reuters.com. https://www.reuters.com/article/us-colombia-environment-rights/death-threats-wont-stop-colombian-anti-mining-activist-idUSKBN1HY2O2. 
  5. "FranciaMárquez 2018 Goldman Prize Recipient South and Central America". Goldman Environmental Prize.

மேலும் வாசிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சியா_மார்க்வெசு&oldid=3860172" இலிருந்து மீள்விக்கப்பட்டது