பிராம்ப்டன் ஜெயின் கோயில்

பிராம்ப்டன் ஜெயின் கோயில் அல்லது பகவான் 1008 ஆதிநாதர் சமணக் கோயில் (Brampton Jain Temple or Bhagwan 1008 Adinatha Swamy Jain Temple) கனடா நாட்டில் இந்தியக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட முதல் சமணக் கோயில் ஆகும்.[1][2]இக்கோயிலின் மூலவர் சமணச் சமயத் தீர்த்தாங்கரர்களில் முதல்வரான ரிசபநாதர் எனும் ஆதிநாதர் ஆவர். இந்த ஜெயின் கோயில் கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகர்புறத்தில் அமைந்துள்ளது.

பிராம்ப்டன் சமணக் கோயில்
பிராம்ப்டன் ஜெயின் கோயில், ஒன்றாரியோ மாகாணம், கனடா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பிராம்ப்டன், ஒன்றாரியோ மாகாணம், கனடா
புவியியல் ஆள்கூறுகள்43°49′40.729″N 79°43′4.51″W / 43.82798028°N 79.7179194°W / 43.82798028; -79.7179194
சமயம்சமணம்
இணையத்
தளம்
jaintemplecanada.com

வரலாறு

தொகு

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சுமார் 10,000 சமணர் வாழ்கின்றனர்..[3]அதில் மூன்றில் இரண்டு பங்கினர் தொராண்டோ பெருநகரத்தில் வாழ்கின்றனர்.[4] இந்தியாவிலிருந்து பத்ரக் சாருகீர்த்தி என்பவர் மேற்பார்வையில், 2011ஆம் ஆண்டிலிருந்து பிராம்ப்டன் ஜெயின் கோயில் நிர்மாணிக்க துவங்கப்பட்டது. [5] இக்கோயில் நிர்மாணிக்க ஜெயினர்கள் நன்கொடைகள் வழங்கினர்.[6]

கட்டிடக் கலை

தொகு

இந்தியப் பாரம்பரியக் கட்டிடக் கலைநயத்தில் இக்கோயில் நிறுவப்பட்டது. மேலும் இக்கோயிலிக்கு முன்பாக பெரிய வெற்றித் தூண் நிறுவப்பட்டுள்ளது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Minor injury at building site after crane topples". 4 July 2014. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
  2. "As more Jains come, their temples flourish in Toronto". பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
  3. Van Voorst, Robert E. (20 January 2016). RELG: World. Cengage Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781305888302. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
  4. Chapple, Christopher Key; Tirosh-Samuelson, Hava (2002). Jainism and ecology. Center for the Study of World Religions, Harvard Divinity School. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780945454335. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
  5. "Foundation Laid For Jain Temple In Brampton". Archived from the original on 2016-01-30. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
  6. "Jainism Ahimsa News Religious Non-Violence Celebrities Literature Philosophy Matrimonial Institutions". Archived from the original on 25 March 2016. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
  7. Wiley, Kristi L. (16 July 2009). The A to Z of Jainism. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810868212. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.

வெளி இணைப்புகள்

தொகு