பிராம்மணி ஆறு
பிராம்மணி ஆறு (Brahmani river) கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் பாயும் பருவ கால ஆறாகும். தெற்கு கோயல் ஆறு மற்றும் சங்கு ஆறுகள் சந்திக்குமிடத்திலிருந்து உற்பத்தி ஆகும் பிராம்மணி ஆறு, சுந்தர்கட், தேபகட், அனுகோள், டேங்கானாள், கட்டக் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டங்கள் வழியாக 480 கிலோ மீட்டர் தொலைவிற்குப் பாய்ந்து பின்னர் மகாநதி மற்றும் பைதரணி ஆறுகளுடன் கலந்து வங்காள விரிகுடாவின் தம்ரா எனுமிடத்தில் கலக்கிறது.[1]
பிராம்மணி ஆறு | |
River | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | ஒடிசா |
உற்பத்தியாகும் இடம் | தெற்கு கோயல் ஆறு மற்றும் சங்கு ஆறுகள் சந்திக்குமிடம் (கூடல்-சங்கமம்) |
- ஆள்கூறு | 22°14′45″N 84°47′02″E / 22.24583°N 84.78389°E |
கழிமுகம் | வங்காள விரிகுடா |
- elevation | 0 மீ (0 அடி) |
வடிநிலம் | 39,033 கிமீ² (15,071 ச.மைல்) |
ஒடிசாவில் மட்டும் பிராம்மணி ஆறு 39,003 சதுர கிலோ மீட்டர் பரப்பு நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.[2]