பிரிட்சு சுவிக்கி

பிரிட்சு சுவிக்கி (Fritz Zwicky) (பிப்ரவரி 14, 1898 – பிப்ரவரி 8, 1974)ஒரு சுவீடன் வானியலாளர். இவர் தன் வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவில் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தார். இங்கு இவர் கோட்பாட்டு, நோக்கீட்டு வானியலில் மிக இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்துள்ளார்.[1] சுவிக்கி 1933 இல் விரியல் தேற்றத்தைப் பயன்படுத்திக் கண்ணுக்குப் புலப்படாத கரும்பொருளைக் கண்டுபிடித்தார். இதை இவர் "dunkle Materie" எனப் பெயரிட்டார்.[2]

பிரிட்சு சுவிக்கி
பிறப்புபிப்ரவரி 14, 1898
வர்னா, பல்கேரியா
இறப்புபெப்ரவரி 8, 1974(1974-02-08) (அகவை 75)
பசதேனா, கலிபோர்னியா, அமெரிக்கா
வாழிடம்அமெரிக்கா
குடியுரிமைசுவிட்சர்லாந்தியர்
துறைவானியல்
பணியிடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்ஏத் சூரிச்
ஆய்வு நெறியாளர்பீட்டஎ தெபை, பௌல் சுசெரர்
அறியப்படுவதுகரும்பொருள், மீவிண்மீன் வெடிப்புe, பால்வெளிகள், நொதுமி விண்மீன்கள்
விருதுகள்குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கம்(1949)
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1972)

வாழ்க்கை தொகு

பிரிட்சு சுவிக்கி பல்கேரியாவில் உள்ள வர்னாவில் சுவீடியத் தந்தைக்குப் பிறந்தார். இவரது தந்தையான பிரிதோலின் (பிறப்பு: 1868), பல்கேரிய நகரத்தில் ஒரு பெயர்பெற்ற தொழிலதிபர். மேலும் இவர் வர்னாவில் நார்வே நாட்டுத் தூதுவராகவும் விளங்கினார்(1908–1933).[3] வர்னாவிலமைந்த சுவிக்கியின் வீடு சுவிக்கியின் தாயாரான பிரிதோலின் சுவிக்கியால் வடிவமைத்துக் கட்டப்பட்டதாகும்.பிரிட்சுவின் தாயார் .(பிறப்பு: 1871)ஆத்திரிய-அங்கேரியப் பேரரசைச் சார்ந்த செக் நாட்டவராவார்.(பிறப்பு: 1871)]. பிரிட்சு சுவிக்கிக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிரந்தர். இவருக்கு உருடோல்ஃப் என்றொரு தம்பியும் இலியோனி என்றொரு தங்கையும் உண்டு. இவரது தாயார் 1927 இல் வர்னாவில் இறந்துவிட்டார். இவரது தந்தையார் 1945 இல் சுவிட்சர்லாந்து மீளும்வரை பல்கேரியாவில் வர்னாவிலேயே இருந்தார். இவரது தங்கை வர்னாவில் வாழ்ந்த பல்கேரியரை மண்ந்து தன் வாழ்நாள் முழுவதும் அங்கெயே வாழ்ந்தார்.[4]

பிரிட்சு ஆறாம் அகவையில் வணிகவியல் படிக்க சுவிட்சர்லாந்தில் கிளாரசுவில் முன்னோர் வீட்டில் வாழ்ந்துவந்த தாத்தா, பாட்டியிடம் அனுப்பப்பட்டார்.[5] இவர் கணித்த்திலும் இயற்பியலிலும் ஆர்வம் காட்டவே கணிதத்திலும் செய்முறை இயற்பியலிலும் சுவிட்சர்லாந்து ஏத்சூரிச் நகரில் உள்ள சுவிட்சர்லாந்து கூட்டரசின் தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர்கல்வி பயின்றுள்ளார். பின்னர் இவர் 1925 இல் இராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் பன்னாட்டு உதவித்த்கை பெற்று கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவன இராபர்ட் மிலிக்கனுடன் பணிபுரிய அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்துள்ளார் ."[5]

அறிவியல் பணிகள் தொகு

 
சுவிக்கி பிறந்த வர்னாவில் உள்ள நினைவுச் சின்னம். இதில் இவர் நொதுமி விண்மீன்கள், கரும்பொருள் கண்டுபிடிப்புக்காற்றிய பங்களிப்புகள் விவரமாக்க் கூறப்பட்டுள்ளன.

பிரிட்சு நுண்மதி வாய்ந்த அற்வியலாளர். இவர் வானியலின் பல பிரிவுகட்கு பங்களிப்புகள் செய்துள்ளார்.

மின்னணுப் படிகங்களும் மின்பகுளிகளும் தொகு

இவரது முதல் அறிவிய்ல் பங்களிப்புகள் மின்னணுப் படிகங்களிலும் மின்பகுளிகளிலும் அமைந்த்து.

மக்கட் பண்பாளர் தொகு

சுவிக்கி அகல்விரிவான சமூக அக்கறையுள்ள ஒரு சிறந்த மக்கட்பண்பாளர் ஆவார். இரண்டாம் உலகப்போருக்குப் பின் அவர் மேற்கொண்ட பணிகளில் தெட்டத் தெளிவாகியது. இவர் போருக்குப் பின் வானியலையும் பிற துறைகளையும் சார்ந்த ஏராளமன நூல்களைத் திரட்டிப் போரில் பெரிதும் அடிபட்ட ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்குக் கப்பலில் அனுப்பினார்.[6][7]

இவர் ஏதிலிகட்கு உதவிவரும் அமெரிக்கப் பெசுத்தலோசி அறக்கட்டளையோடு தொடர்ந்து ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளார். சுவிக்கி தனது பணிகளுக்காக 1955 இல் அந்நிறுவனத்தின் பொற்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.[6]

சுவிக்கி மலைகளைப் பெரிதும் விரும்பினார். ஆல்பைன் மலையேறி வெற்றியும் ஈட்டினார்.[8]

தகைமைகள் தொகு

  • இரண்டாம் உலகப்போரின்போது, 1949 இல் டுரூமேன் சுவிக்கிக்கு விடுதலைக்கான குடியரசுத் தலைவர் விருதை ஏவுகலச் செலுத்த ஆய்வுக்காக வழங்கினார்.[6] சுவிக்கி 1968 இல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவுறு பேராசிரியர் பதவி அளிக்கப்பட்டது.
  • சுவிக்கிக்கு 1972 இல், வானியலிலும் அண்டவியலிலும் பெருபங்களிப்பு செய்தவர்களுக்கு தரும், [[அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் வழங்கப்பட்டது.[9] இந்த விருது குறிப்பாக நொதுமி விண்மீன்கள், கரும்பொருண்மம், பல்வெளிகளை அட்டவணைப்படுத்தல் பற்றிய இவரது பணிகளைக் குறிப்பிடுகிறது.
  • இவருக்கு மதிப்புதரும் வகையில் சிறுகோள் 1803 சுவிக்கியும் நிலாவில் உள்ள சுவிக்கிக் குழிப்பள்ளமும் இவரது பெயரால் அழைக்கப்படுகிறன.

வெளியீடுகள் தொகு

தன் நெடிய வாழ்நாள் முழுவதும் பரவலான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். கீழுள்ள தெரிவுசெய்த உய்ய பகுப்பய்வுடனான வெளியீடுகள் அவரது பணியின் புலமைப்பரப்பையும் பாங்கையும் சுட்டுகின்றன.

  • Zwicky, F. (October 1929), "On the Red Shift of Spectral Lines through Interstellar Space", Proceedings of the National Academy of Sciences, 15 (10): 773–779, Bibcode:1929PNAS...15..773Z, doi:10.1073/pnas.15.10.773, PMC 522555, PMID 16577237. இந்தக் கட்டுரை ஃஅப்புள் விதியை விளக்குவதற்காக, தளரொளி படிமத்தை முன்மொழிகிறது. (full article பரணிடப்பட்டது 2008-05-30 at the வந்தவழி இயந்திரம்)
  • Baade, W.; Zwicky, F. (1934), "On Super-novae", Proceedings of the National Academy of Sciences, 20 (5): 254–259, Bibcode:1934PNAS...20..254B, doi:10.1073/pnas.20.5.254, PMC 1076395, PMID 16587881, and Baade, W.; Zwicky, F. (1934), "Cosmic Rays from Super-novae", Proceedings of the National Academy of Sciences, 20 (5): 259–263, Bibcode:1934PNAS...20..259B, doi:10.1073/pnas.20.5.259. இந்தக் கட்டுரைகள் முறையே மீவிண்மீன் வெடிப்பு, நொதுமி விண்மீன் ஆகியவற்றின் கருத்துப் படிமங்களை அறிமுகப்படுத்துகிறது.
  • Zwicky, F. (November 1938), "On Collapsed Neutron Stars", Astrophysical Journal, 88: 522–525, Bibcode:1938ApJ....88..522Z, doi:10.1086/144003. முன்பு மீவிண்மீன் வெடிப்பு கட்டுரையில் அறிமுகப்படுத்திய நொதுமி விண்மீன் எண்ணக்கரு, உய்ய உடுக்கண பொருண்மை, கருந்துளை கண்ணோட்டங்களோடு விளக்குகிறது.
  • Zwicky, F. (December 1939), "On the Formation of Clusters of Nebulae and the Cosmological Time Scale", Proceedings of the National Academy of Sciences, 25 (12): 604–609, Bibcode:1939PNAS...25..604Z, doi:10.1073/pnas.25.12.604. இதில் சுவிக்கி விரிவுறும் புடவிப் படிமத்தை விட பழைய புடவிநிலையை ஒண்முகிலின் வடிவம் சுட்டுகிறதென வாதிடுகிறார்.
  • Zwicky, F. (August 1941), "A Mosaic Objective Grating for the 18-inch Schmidt Telescope on Palomar Mountain", Publications of the Astronomical Society of the Pacific, 53: 242–244, Bibcode:1941PASP...53..242Z, doi:10.1086/125331. சுவிக்கி இசுக்கிமிடின் அகல்கோண தொலைநோக்கியைப் பயன்படுதலைப் பெரிதும் ஊக்குவித்தார். மேலும் அதை விரிவாகப் பயன்படுத்திப் பல அரிய கண்டுபிடிப்புகளையும் செய்தார்.
  • Zwicky, F. (1945), Report on certain phases of war research in Germany, Aerojet Engineering Corp.சுவிக்கி போர்க்காலத்திலும் பின்பும் காற்றுத்தாரை சார்ந்த தாரைச் செலுத்தம் உள்ளிட்ட பான்மைகளை ஆய்வு செய்துள்ளார்.
  • Zwicky, F. (1957), Morphological astronomy, Springer-Verlag.இந்த நூலில் சுவிக்கி வானியல் கண்டுபிடிப்புகளுக்கான கருவியாக புறவடிவ ஆய்வுக் கண்ணோட்டங்களை ஆற்றோட்டமாகக் கையாள்கிறார்.
  • Zwicky, F. (October 1958), "Nuclear Goblins and Flare Stars", Publications of the Astronomical Society of the Pacific, 70: 506–508, Bibcode:1958PASP...70..506Z, doi:10.1086/127284. நொதுமி விண்மீன்களை முன்மொழிந்த்தோடு, சுவிக்கி பேரளவு விண்மீன்களில் நிலவும் நிலைப்பற்ற நொதுமி அடர்த்தித் திரள்கள் பற்றியும் முன்மொழிந்துள்ளார்.
  • Zwicky, F. (1969), Discovery, invention, research through the morphological approach, MacMillan.சுவிக்கி புறவடிவ ஆய்வை அடிப்படை அறிவியலுக்கப்பாலான அறிவியல் புலங்களில் உள்ள அனைத்துச் சிக்கல்களுக்கும் பயன்ப்டுத்தலாம் எனவும் ஆற்றுப்படுத்தினார்.

குறிப்புகளும் மேற்கோள்களும் தொகு

  1. Halton Arp (June 1974). "Fritz Zwicky". Physics Today 27 (6): 70–71. doi:10.1063/1.3128662. Bibcode: 1974PhT....27f..70A. http://www.physicstoday.org/resource/1/phtoad/v27/i6/p70_s1?bypassSSO=1. பார்த்த நாள்: 2016-01-14. 
  2. Zwicky, F. (1933), "Die Rotverschiebung von extragalaktischen Nebeln", Helvetica Physica Acta, 6: 110–127, Bibcode:1933AcHPh...6..110Z See also Zwicky, F. (1937), "On the Masses of Nebulae and of Clusters of Nebulae", Astrophysical Journal, 86: 217, Bibcode:1937ApJ....86..217Z, doi:10.1086/143864
  3. "Организират конференция, посветена на родения във Варна астроном Фриц Цвики" (in Bulgarian). Днес+. 2008-02-13 இம் மூலத்தில் இருந்து 2010-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100201093915/http://dnesplus.bg/Society.aspx?f=99. பார்த்த நாள்: 18 March 2010. 
  4. Ivanova, Natasha (2008), "110th anniversary of the astrophysicist Fritz Zwicky", Bulgarian Astronomical Journal (in Bulgarian), Astronomical Observatory and Planetarium of Varna, 10: 135, Bibcode:2008BlgAJ..10..135I{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  5. 5.0 5.1 Richard Panek, The Father of Dark Matter. Discover. pp.81-87. January 2009.
  6. 6.0 6.1 6.2 Greenstein, J.L. (March–April 1974), "Fritz Zwicky - Scientific Eagle (obituary)" (PDF), Engineering and Science, CalTech: 15–19, பார்க்கப்பட்ட நாள் 2007-07-14
  7. Fritz Zwicky's Extraordinary Vision, American Museum of Natural History, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16, an extract from Soter, S.; Tyson, N.D. (2000), Cosmic Horizons: Astronomy at the Cutting Edge, New Press
  8. Maurer, S.M. (2001), "Idea Man" (PDF), Beamline, 31 (1), பார்க்கப்பட்ட நாள் July 10, 2007
  9. Meeting of the Royal Astronomical Society (PDF), February 1972, பார்க்கப்பட்ட நாள் 2007-07-14

வெளி இணைப்புகள் தொகு

  • Ritchey, T., Fritz Zwicky, பார்க்கப்பட்ட நாள் 2007-07-10

http://www.amg.swemorph.com/pdf/amg-1-3-2012.pdf பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிட்சு_சுவிக்கி&oldid=3915139" இலிருந்து மீள்விக்கப்பட்டது