பிரிதிலதா வதேதர்

இந்திய விடுதலை வீராங்கனை
(பிரிட்டிலடா வதேதர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரிதிலதா வதேதர் (Pritilata Waddedar) (5 May 1911 – 23 செப்டம்பர் 1932)[1] இந்திய சுதந்திர விடுதலை இயக்கத்தில் செல்வாக்கு பெற்ற ஒரு வங்கதேச புரட்சிகர தேசியவாதி ஆவார்.[2][3] சிட்டகொங் , டாக்கா ஆகிய இடங்களில் ஆரம்பக் கல்வியை முடித்தபின், கொல்கத்தா பெதுன் கல்லூரியில் மெய்யியல் பிரிவில் பட்டம் பெற்றார்.

பிரிதிலதா வதேதர்
பிறப்பு(1911-05-05)5 மே 1911
தால்காட், பாட்டியா, சிட்டகொங், வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்போதைய வங்காளதேசம்)
இறப்பு23 செப்டம்பர் 1932(1932-09-23) (அகவை 21)
சிட்டகொங், வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்போதைய வங்காளதேசம்)
இறப்பிற்கான
காரணம்
பொட்டாசியம் சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேசியம்பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
மற்ற பெயர்கள்ராணி (செல்லப்பெயர்)
படித்த கல்வி நிறுவனங்கள்பெதுன் கல்லூரி
பணிபள்ளி ஆசிரியர்
அறியப்படுவதுபகர்தாலி ஐரோப்பிய விடுதி தாக்குதல் (1932)
உறவினர்கள்மதுசூதன் (சகோதரன்)
கனக்லடா (சகோதரி)
சாந்திலதா (சகோதரி)
ஆஷாலதா (சகோதரி)
சந்தோஷ் (சகோதரன்)

சிறுது காலத்திற்கு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த பிறகு, பதினைந்து புரட்சியாளர்கள் குழுவை வழி நடத்தி வந்த சூரியா சென் தலைமையில் ஒரு புரட்சிகர குழுவில் இணந்தார்.[4] "நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதியில்லை" என்று ஒரு குறியீட்டு பலகை இருந்த[5] பகர்தாலி ஐரோப்பிய விடுதியின் மீது 1932இல் தாக்குதல் நடத்தினார்.[6][7] புரட்சியாளர்கள் விடுதியினைத் தாக்கிய பின்னர், பிரித்தானிய காவலர்கள் கைது செய்வதைத் தவிர்க்க, பொட்டாசியம் சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.[8]

இளமை வாழ்க்கை

தொகு
 
பள்ளிச் சான்றிதழ்

பிரிதிலதா, வைத்ய பிராமண குடும்பத்தில்[9] சிட்டகொங் மாகாணத்தின் ( தற்போது வங்காளதேசம் ). பாட்டியா உபசில்லாவிலுள்ள தால்காட் கிராமத்தில் 1911 மே 5 அன்று பிறந்தார்.[10] "வதேதர்" என்பது இவரது குடும்பத்தின் மூதாதையர்களின் பெயராகும். இவரது தந்தை ஜகபந்து வதேதர் சிட்டகொங் நகராட்சியில் ஒரு எழுத்தராக இருந்தார்.[2][11] இவரது பெற்றோருக்கு இவரையும் சேர்த்து மதுசூதன், கனகலதா,சாந்திலதா,ஆஷாலதா, சந்தோஷ் என்ற ஆறு குழந்தைகள் பிறந்தனர். இவருக்கு 'ராணி' என்ற செல்லப்பெயர் உண்டு.[11]

ஜகபந்து தன்னுடைய குழந்தைகள் சிறந்த கல்வி கற்க ஏற்பாடு செய்ய முயன்றார்.[12] பிரிதிலதாவிற்கு, சிட்டகொங்கிலுள்ள டாக்டர் கஸ்தகீர் அரசு பெண்கள் பள்ளியில் இடம் கிடைத்தது. அப்பள்ளியில் சிறந்த மாணவியாக திழ்ந்தார்.[13] பள்ளியில் மாணவிகள் இவரை "உஷா தி" என அழைத்தனர். இவரது மாணவர்களிடம் தேசியவாதத்தை ஊக்குவிப்பதற்காக இராணி இலட்சுமிபாய் கதைகளைப் பயன்படுத்தினார். "சிட்டகொங் ஆமரி ரெய்டர்ஸ் "என்ற நூலில், "கல்பனா தத்தா" இவ்வாறு எழுதுகிறார், "எதிர்காலத்தைப் பற்றி பள்ளி நாட்களில் எங்களுக்குத் தெளிவான யோசனை இல்லை. சில நேரங்களில் எங்களை நினைத்து பயப்படாமல் இருக்க இராணி இலட்சுமிபாய் உத்வேகத்தை அளித்தார்."[14] கலை மற்றும் இலக்கியம் பிரிட்டிலடாவிற்கு பிடித்த பாடங்கள் ஆகும்.[15] 1928ஆம் ஆண்டில் டாக்டர் கஸ்தகிர் அரசுப் பள்ளியிலிருந்து வெளியேறி, 1929ஆம் ஆண்டில், டாக்கா ஈடன் கல்லூரியில், சேர்ந்தார். டாக்கா இடைநிலைத் தேர்வு வாரியத்தின் வருடாந்தரத் தேர்வுகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களிலும் இவர் முதலிடம் வகித்தார்.[5][12] ஈடன் கல்லூரியில் மாணவராக, இவர் பல்வேறு சமூக நடவடிக்கைகளில் பங்கு பெற்றார். இலீலா நாக் என்பவரது தலைமையிலான "சிறீசங்கம்" என்ற குழுவில் "தீபாலி சங்கம் என்ற நிகழ்ச்சியினை வழங்கினார்.[5]

கல்கத்தாவில்

தொகு

பிரிதிலதா உயர்கல்வி பயில, கொல்கத்தாவிற்கு சென்று பெதுன் கல்லூரியில் சேர்ந்து, கல்லூரியில் தத்துவ பாடத்தில் பட்டம் பெற்றார்.[16] இருப்பினும், இவரது பட்டத்தை கொல்கத்தா பல்கலைக்கழக பிரித்தானிய அதிகாரிகள் 2012இல் நிறுத்தி வைத்தனர். இவரது இறப்பிற்குப் பின்னர், பினா தாஸ் மற்றும் இவரது சான்றிதழ்களை தகுதி வாய்ந்தவராக்கினர்.[3]

ஒரு பள்ளி ஆசிரியராக

தொகு

கொல்கத்தாவில் தனது கல்வியை முடித்தபின், பிரிதிலதா சிட்டகொங்கிற்குத் திரும்பினார். சிட்டகொங்கில், நந்தன்கனன் அபர்னாச்சரன் என்ற உள்ளூர் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்தார்.[5][12][17]

புரட்சிகர நடவடிக்கைகள்

தொகு

சூர்யா சென்னின் புரட்சிகர குழுவில் சேர்தல்

தொகு

"பிரிதிலதா இளம் மற்றும் தைரியமான பெண்ணாக இருந்தார். அவர் நிறைய ஆர்வத்துடன் பணிபுரிவார். மேலும் பிரித்தானிய அரசை நமது நாட்டை விட்டு வெளியேற்ற தீர்மானித்திருந்தார்."

வினோத் பிஹாரி சௌத்ரி, சமகால புரட்சியாளர்[18]

பிரிதிலதா இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர முடிவு செய்தார். சூர்யா சென்னைப் பற்றி கேள்விப்பட்டு அவருடைய புரட்சிகர குழுவில் சேர விரும்பினார்.[18] சூன் 13, 1932இல், இவர் சூர்ய சென் மற்றும் நிர்மல் சென் ஆகியோரை தால்காட் முகாமில் சந்தித்தார்.[11] சமகால புரட்சியாளரான, வினோட் பிஹாரி சௌத்ரி, பெண்கள் தங்கள் குழுவில் சேர எதிர்த்தார். இருப்பினும், ஆயுதங்களைக் கையாளும் பெண் புரட்சியாளர்களை ஆண்களைப் போல சந்தேகப்பட மாட்டார்கள் என்பதால் இவர் குழுவில் சேர அனுமதிக்கப்பட்டார்.[18]

பகர்தாலி ஐரோப்பிய விடுதித் தாக்குதல் (1932)

தொகு
 
பகர்தாலி ஐரோப்பிய விடுதி (2010) புரட்சியாளர்களால் தாக்கப்பட்டது

1932ஆம் ஆண்டில், "நாய்களுக்கும் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை" என்று எழுதி வைத்திருந்த ஒரு ஐரோப்பிய விடுதி மீது சூர்யா சென் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்.[19] இந்த பணிக்காக ஒரு பெண் தலைவரை நியமிக்க முடிவு செய்தார். கல்பனா தத்தா இந்நிகழ்வுக்கு ஏழு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தர். இதன் காரணமாக, இவர் இத்தாக்குதலுக்கு தலைமை ஏற்றார். இவர் கோட்டோவாலி கடல் பகுதிக்கு ஆயுதப்பயிற்சியிடத்துக்குச் சென்று, அங்கே அவர்கள் மீது தாக்குதலை நடத்த திட்டமிட்டார்.[12] இவர்கள் செப்டம்பர் 23, 1932 அன்று தாக்குதல் நடத்த முடிவு செய்தனர். குழுவின் உறுப்பினர்களுக்கு, பிடிபட்டால் விழுங்குவதற்கு பொட்டாசியம் சயனைடு வழங்கப்பட்டது.[5] தாக்குதல் நடந்த நாளில், இவர் ஒரு பஞ்சாபி ஆண் போன்ற ஆடை அணிந்தார். இவரது கூட்டாளிகளான கலிசங்கர் தே, பரேசுவர் ராய், பிரபுல்லா தாஸ், சாந்தி சக்ரவர்த்தி ஆகியோர் வேட்டியும், சட்டையும் அணிந்திருந்தனர். மகேந்திர சௌதிரி, சுசில்தே, பன்னா சென் ஆகியோர் லுங்கியும், சட்டையும் அணிந்திருந்தனர்.[20] அவர்கள் காலை 10.45 மணியளவில் விடுதியை அடைந்தனர். உள்ளே சுமார் 40 பேர் இருந்தனர். புரட்சியாளர்கள் தாக்குதலுக்கு மூன்று தனி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். சில காவல் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இவர் மீது ஒரு குண்டு காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில், சல்லிவன் என்ற ஒரு பெண்ணும் நான்கு ஆண்களும், ஏழு பெண்களும் காயமடைந்தனர் என காவலர்கள் அறிக்கை தெரிவிக்கிறது.[20]

இறப்பு

தொகு
 
பிரிதிலதா தற்கொலை செய்து கொண்ட இடம்

காயமடைந்த பிரிதிலதா பிரித்தானிய காவலர்களிடம் சிக்கியதும்[2] கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக சயனைடை விழுங்கினார்.[18] அடுத்த நாள், காவலர்கள் இவரது உடலை கண்டுபிடித்து அடையாளம் காட்டினர். இவரது இறந்த உடலுடன் சில துண்டு பிரசுரங்கள், ராம்க்ரிகா பிஸ்வாஸின் புகைப்படம், தோட்டாக்கள், விசில், தாக்குதல் திட்டத்தின் வரைவு ஆகியவற்றைக் கண்டெடுக்கப்பட்டது. பிணக்கூறு ஆய்வின் போது குண்டு காயம் மிகவும் கடுமையானதாக இல்லை என்றும், சயனைடு விஷமே இவரது மரணத்திற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது.[20]

தாக்கம்

தொகு
 
சிட்டகொங் துவக்கப்பள்ளியில் பிரிதிலதாவின் மார்பளவு சிலை

வங்காளதேச எழுத்தாளர் செலினா உசைன், ஒவ்வொரு பெண்ணிற்கும் இவர் சிறந்த எடுத்துக் காட்டாய் விளங்குவதாக கூறுகிறார். [21] ஒவ்வொரு ஆண்டும் வங்காளதேசத்திலும், இந்தியாவின் பல்வேறு இடங்களிளும் இவரது பிறந்த நாளானது கொண்டாடப்படுகிறது.[22] சிட்டகொங்கில் உள்ள போல்காலி உபாசிலாவின் முகுந்தா ராம் காட்டுக்கும் சாஹித் அப்துஸ் சாப்பூர் சாலைவரை பிரிதிலதா வதேதர் என்ற இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.[23] 2012 ஆம் ஆண்டில், இவரது ஒரு வெண்கல சிற்பம் ஐரோப்பிய விடுதுக்கு அருகில் உள்ள பகர்தாலி இரயில்வே பள்ளி முன் அமைக்கப்பட்டது.[24][25] இவரது பெரிய-மருமகள் சாஷ் சர்கார், பிரித்தானிய பத்திரிகையாளரும், கல்வியாளரும் ஆவார்.[26]

காட்சிப் பொருள்கள்

தொகு

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Pritilata's 100th birthday today". The Daily Star. 5 May 2011. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=184343. பார்த்த நாள்: 18 December 2012. 
  2. 2.0 2.1 2.2 "Pritilata Waddedar (1911–1932)". News Today இம் மூலத்தில் இருந்து 26 January 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120126141408/http://www.newstoday.com.bd/index.php?option=details&news_id=51162&date=2012-01-25. பார்த்த நாள்: 18 December 2012. 
  3. 3.0 3.1 "After 80 yrs, posthumous degrees for revolutionaries". The Times of India. 22 March 2012. http://timesofindia.indiatimes.com/city/kolkata/After-80-yrs-posthumous-degrees-for-revolutionaries/articleshow/12364819.cms. பார்த்த நாள்: 18 December 2012. 
  4. Geraldine Forbes (28 April 1999). Women in Modern India. Cambridge University Press. pp. 140–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-65377-0.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Amin, Sonia (2012). "Waddedar, Pritilata". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  6. "Remembering the Legendary Heroes of Chittagong". NIC. பார்க்கப்பட்ட நாள் 6 January 2013.
  7. "Indian Independence" (PDF). Archived from the original (PDF) on 19 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013.
  8. Craig A. Lockard (1 January 2010). Societies, Networks, and Transitions: A Global History: Since 1750. Cengage Learning. pp. 699–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4390-8534-9. பார்க்கப்பட்ட நாள் 18 December 2012.
  9. "A fearless female freedom-fighter". Rising Stars (The Daily Star). http://archive.thedailystar.net/rising/2004/09/05/switch.htm. பார்த்த நாள்: 18 December 2012. 
  10. "Pritilata's birth anniversary observed at CU". New Age இம் மூலத்தில் இருந்து 29 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130129160031/http://www.newagebd.com/detail.php?date=2012-05-06http://www.newagebd.com/detail.php%3Fdate=2012-05-06&nid=9340%23.UQfx-33LdRx. பார்த்த நாள்: 19 December 2012. 
  11. 11.0 11.1 11.2 "Agnijuger Agnikanya Pritilata" (in bn). BDNews. 5 May 2011. http://blog.bdnews24.com/ruman11/15681. பார்த்த நாள்: 19 December 2012. 
  12. 12.0 12.1 12.2 12.3 "The Fire-Brand Woman Of Indian Freedom Struggle". Towards Freedom. Archived from the original on 18 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 18 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. Pritilata (in Bengali). Prometheus er pothe. 2008. p. 15.
  14. Kalpana Dutt (1979). Chittagong Armoury raiders: reminiscences. Peoples' Pub. House. p. 46.
  15. Manini Chatterjee (1999). Do and die: the Chittagong uprising, 1930–34. Penguin Books. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-029067-7.
  16. S. S. Shashi (1996). Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh. Anmol Publications. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7041-859-7.
  17. "CCC plans to house 2 girls' schools in commercial complex". The Daily Star. 31 January 2009. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=73697. பார்த்த நாள்: 18 December 2012. 
  18. 18.0 18.1 18.2 18.3 "A Long Walk to Freedom". Star Weekend Magazine (The Daily Star). http://archive.thedailystar.net/magazine/2010/02/03/cover.htm. பார்த்த நாள்: 18 December 2012. 
  19. "80th death anniversary of பிரிட்டிலடா observed". News Age இம் மூலத்தில் இருந்து 25 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130725180819/http://www.newagebd.com/detail.php?date=2012-09-25&nid=24889%23.UfIdvWfancc. பார்த்த நாள்: 18 December 2012. 
  20. 20.0 20.1 20.2 Pal, Rupamay (1986). Surjo Sener Sonali Swapno. Kolkata: Deepayan. p. 162.
  21. "Contribution of Pritilata recalled". The Daily Star. 1 June 2011. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=188097. பார்த்த நாள்: 18 December 2012. 
  22. "A beacon of light for women". The Daily Star. 26 September 2012. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=251218. பார்த்த நாள்: 18 December 2012. 
  23. "Road named after Pritilata in Ctg". The New Nation. 18 December 2012 இம் மூலத்தில் இருந்து 3 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130203234257/http://www.thenewnationbd.com/newsdetails.aspx?newsid=4347. பார்த்த நாள்: 18 December 2012. 
  24. "Pritilata's bronze sculpture to be installed in port city". The Daily Star. 2 October 2012. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=252027. பார்த்த நாள்: 20 August 2015. 
  25. "Pritilata's memorial sculpture unveiled in Ctg". The Daily Star. 3 October 2012. http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=252261. பார்த்த நாள்: 20 August 2015. 
  26. Sarkar, Ash (2018-02-05). "My great-great-aunt was a terrorist: women’s politics went beyond the vote" (in en). The Guardian. https://www.theguardian.com/commentisfree/2018/feb/05/relatives-terrorist-past-women-politic-british-bengal. 

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிதிலதா_வதேதர்&oldid=3791924" இலிருந்து மீள்விக்கப்பட்டது