பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையின் தொடர்பாடற் சேவைகள்

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் தொடர்பாடல் சேவைகள் விரிவுபடுத்தப்பட்ட ஒரு காலகட்டமாகக் கொள்ளலாம். பிரித்தானியர்களினால் தொடர்பாடல் சேவைகளில் முதல்கட்டமாக தபால் சேவை ஆரம்பமும், விரிவாக்கமும் மேற்கொள்ளப்பட்டதை குறிப்பிட முடியும். இலங்கையில் தொடர்பாடல் துறையின் விரிவாக்கத்துக்கு பிரித்தானியர் கூடுதலான ஆர்வம் காட்டியமைக்கான காரணிகள்:

  • இராணுவ நோக்கம்
  • நிர்வாக நடவடிக்கையை இலகுபடுத்தல்
  • பெருந்தோட்ட நடவடிக்கையை இலகுபடுத்தல் (இலாப நோக்கம்)

தபால்சேவை

தொகு

இலங்கை வரலாற்றில் தபால்சேவை 1832ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்புக்கும், கண்டிக்குமிடையில் இச்சேவை குதிரை வண்டிகள் மூலம் நடத்தப்பட்டுள்ளன.

19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் இலங்கையில்தான் முதன் முதலில் புகையிரதம் மூலம் தபால் சேவை நடத்தப்பட்டது.

தந்திச் சேவை

தொகு

இலங்கை வரலாற்றில் தந்திச் சேவை 1858ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இச்சேவை முதலில் கொழும்புக்கும் காலிக்குமிடையில் இடம்பெற்றது.

தொலைபேசி

தொகு

1880ம் ஆண்டில் தொலைபேசிச் சேவை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரதான நகரத்துக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட இச்சேவை படிப்படியாக நகரங்களுக்கிடையே விஸ்தரிக்கப்பட்டது.

இலங்கைச் செய்தித்தாள்கள்

தொகு

தேசாதிபதி சேர். வில்மட் இலங்கையின் வர்த்தமானி எனும் செய்தித்தாளை முதலில் ஆரம்பித்தார். பெப்ரவரி 04 1831ல் த ஒப்சேவர் அண்ட் கொமர்சியல் அட்வைசர் எனும் பத்திரிகையும், 1838ல் சிலோன் ஹெரல்ட் எனும் பத்திரிகையும் 1846ல் சிலோன் டைம்ஸ் எனும் பத்திரிகையும், 1846ல் சிலோன் எக்ஸ்ஸாமினர் எனும் பத்திரிகையும் வெளியிடப்பட்டன.

உசாத்துணை

தொகு
  • மெண்டிஸ், ஜீ. ஸி - நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி, 1969
  • புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998