பிரியம் (திரைப்படம்)

1996 திரைப்படம்

பிரியம் (Priyam) என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும் என். பாண்டியன் இயக்கிய இப்படத்தை கஸ்தூரி பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் என்ற பதாகையின் கீழ் அசோக் சாம்ராஜ் தயாரித்தார். இப்படத்தில் அருண் விஜய், மந்த்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். பிரகாஷ் ராஜ் துணைப்பாத்திரத்தில் நடித்தார். இப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்தார்.[1]

பிரியம்
இயக்கம்என். பாண்டியன்
தயாரிப்புஅசோக் சாம்ராஜ்
இசைவித்தியாசாகர்
நடிப்புஅருண் விஜய்
மந்த்ரா
பிரகாஷ் ராஜ்
கலையகம்கஸ்தூரி பிலிம் இன்டர்நேசனல்
வெளியீடு16 ஆகத்து 1996
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

இப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்தார்.

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 "ஆதாம் ஏவால்" மனோ, தேவி வைரமுத்து
2 "தில்ருபா தில்ருபா" கோபால் ராவ், அனுராதா ஸ்ரீராம்
3 "கதல் வலை" கோபால் ராவ், சிந்து இலகியன்
4 "ஒரு கேள்வி" பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா வைரமுத்து
5 "துள்ளி வரும்" மனோ, சுவர்ணலதா
6 "உதய வெண்ணிலா" ஹரிஹரன், சித்ரா

வெளியீடு தொகு

இந்த படம் வணிக ரீதியாக சுமாரான வெற்றியை ஈட்டியது.[2] இந்த படம் பின்னர் 2000 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர்கள் சி. எச். கனேஸ்வர ராவ் மற்றும் பி. இந்திரா ஆகியோரால் தெலுங்கில் இதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இப்பட்டதின் வெற்றியால் ஊக்கம் பெற்ற தயாரிப்பாளர் அசோக் சாம்ராட், முரளி மற்றும் திவ்யா உன்னி ஆகியோரைக் கொண்டு பாண்டியனின் இயக்கத்தில் கல்வெட்டு என்ற படத்தைத் தொடங்கினார். தயாரிப்பு சிக்கல் காரணமாக படம் பின்னர் படத்தின் பணிகள் நின்றன. இதன் பிறகு சாம்ராட் திரைத்துறையிலிருந்து விலகினார்.[3][4]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியம்_(திரைப்படம்)&oldid=3710444" இருந்து மீள்விக்கப்பட்டது