பிரியா பாபு
பிரியா பாபு (ஆங்கில மொழி: Priya Babu) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுப்பாலினச் செயல்பாட்டாளர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், பேச்சாளராவார். திருநங்கையருக்கான திருநங்கையர் ஆவண மையத்தை மதுரையில் 2016 இல் தொடங்கி, நடத்திவருகிறார்.[1] மாற்றுப் பாலினத்தவர்களின் படைப்புகள் வெளியிட டிரான்ஸ் பதிப்பகத்தையும் இசைப் பாடல்கள் போன்றவற்றை வெளியிடும் டிரான்ஸ்மீடியா எனும் யூடியூப் அலைவரிசையையும் நிர்வகித்து வருகிறார்.[2]
பிரியா பாபு | |
---|---|
பிறப்பு | திருச்சி |
இருப்பிடம் | மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
இளமைக்காலம்
தொகுதிருச்சியில் பிறந்த இவர் 1990 களில் மும்பைக்கு சென்றார். பாலின அடையாளத்துடன் பல்வேறு சமூகச் சிக்கலை அங்கே எதிர்கொண்டார். சு. சமுத்திரம் எழுதிய வாடாமல்லி நூலைப் படித்தபிறகு புதிய உத்வேகம் பெற்று, தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் தொடங்கினார்.[3] 2001 ஆம் ஆண்டு தமிழக திரும்பி வந்து திருநங்கைகளின் நலனுக்காக செயல்படத்தொடங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக கலை இலக்கிய இரவுகளில் நாடகங்களை அரங்கேற்றினார்.[4]
இயக்கியவை
தொகு- தமிழகத்தில் திருநங்கையர் வழக்காறுகள் - ஆவணப்படம்
- வானம் தாண்டி (2017)- இசைத் தொகுப்பு
- அரிகண்டி (2021) -குறும்படம்[5]
நூல்கள்
தொகுஆண்டு | தலைப்பு | குறிப்பு |
---|---|---|
2007 | அரவாணிகள் சமூக வரைவியல் | |
2008 | மூன்றாம் பாலின் முகம்(புதினம்) | கோவை நிர்மலா கலைக் கல்லூரி, மதுரை மீனாட்சி கல்லூரிகளில் பாடத்திட்டமாக உள்ளது.[1] |
2014 | வெற்றிப்படிக்கட்டுகள் | |
2021 | இடையினம் |
விருதுகள்
தொகு- 2012 பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் பெரியார் விருது[6]
- 2014 திராவிடர் கழகத்தின் பெரியார் விருது[7]
- 2018 அவள் விகடனின் செயல்புயல் விருது.[8]
- மேலும் சிறந்த சமூகச் சேவர்கள், சிறந்த மாற்றுப்பாலினச் செயல்பாட்டாளர் விருதுகளையும் பெற்றுள்ளார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "'கணவரோடு நான் வாழ்ந்தால் தற்கொலை செய்துகொள்வோம் என்று மிரட்டினார்கள்'.... - எழுத்தாளர் பிரியா பாபு". விகடன். https://www.vikatan.com/health/writer-priya-babu-speaks-about-his-stress-relief-techniques. பார்த்த நாள்: 24 December 2023.
- ↑ "First transgender publication and film company opened in Madurai Read more At: https://www.aninews.in/news/national/features/first-transgender-publication-and-film-company-opened-in-madurai20220705165120/". ஏ.என்.ஐ.. https://www.aninews.in/news/national/features/first-transgender-publication-and-film-company-opened-in-madurai20220705165120/. பார்த்த நாள்: 24 December 2023.
- ↑ "திருநங்கைகள் வாழ்வாதாரம் மேம்பட உதவும் திருநங்கை பிரியா பாபு கடந்து வந்த பாதை!". யுவர் ஸ்டோரி. பார்க்கப்பட்ட நாள் 24 December 2023.
- ↑ "’காதலிக்கும் ஆண்கள் பாலியல் வடிகாலாக பயன்படுத்துகின்றனர்’ - திருநங்கை பிரியா பாபு உருக்கம்". வெப்துனியா. https://tamil.webdunia.com/regional-tamil-news/mens-uses-of-transgender-as-a-sexual-plotform-priya-babu-116102500035_1.html. பார்த்த நாள்: 24 December 2023.
- ↑ "Period short film on transgender warrior breaks stereotypes Read more at: http://timesofindia.indiatimes.com/articleshow/104792091.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/madurai/period-short-film-on-transgender-warrior-breaks-stereotypes/articleshow/104792091.cms. பார்த்த நாள்: 24 December 2023.
- ↑ "பாரதிதாசன்-பல்கலை-பெரியார்-விருதுகள்-வழங்கல்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2012/nov/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-580249.html. பார்த்த நாள்: 24 December 2023.
- ↑ "திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக சேவையாற்றியவருக்கு பெரியார் விருது". வெப்துனியா. https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-114011500047_2.html. பார்த்த நாள்: 24 December 2023.
- ↑ "'செயல்புயல்' பிரியா பாபு". விகடன். பார்க்கப்பட்ட நாள் 24 December 2023.
- ↑ "Humanitarian Awards for social activists". தி இந்து. https://www.thehindu.com/news/cities/chennai/humanitarian-awards-for-social-activists/article65675939.ece. பார்த்த நாள்: 24 December 2023.