பிரீஜா சிறீதரன்

இந்திய தடகள விளையாட்டு வீரர்

பிரீஜா சிறீதரன் (Preeja Sreedharan) கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முல்லக்கானத்தில் 13 மார்ச் 1982 அன்று பிறந்த இந்திய தடகள விளையாட்டு வீரர். 2010 ஆசியட்டில் 10000 மீட்டர் நிகழ்வில் தங்கப் பதக்கமும் 5000 மீட்டர் நிகழ்வில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.10000 மீ மற்றும் 5000மீட்டர் போட்டிகளில் இந்திய சாதனையாளராக விளங்குகிறார்.

2006ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுகளில் 10000 மற்றும் 5000 மீ போட்டிகளில் ஐந்தாவது இடத்தை வென்றார். 2007ஆம் ஆண்டு அம்மானில் ஆசிய தடகள சாதனைப் போட்டிகளில் 10000 மீ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

குவாங்சோ ஆசிய விளையாட்டுகளில் 10000 மீ ஓட்டத்தில் அவரடைந்த 31:50:28 நிமிட சாதனை அவரது சிறந்த நேரமாகும்.இது இந்திய தேசிய சாதனையும் ஆகும்.[1]

அல்போன்சா கல்லூரி,பாலையிலிருந்து பட்டப்படிப்பை முடித்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீஜா_சிறீதரன்&oldid=2647131" இலிருந்து மீள்விக்கப்பட்டது