பிரீத்தி பால்

இந்திய இணை ஒலிம்பிக் தடகளப் போட்டியாளர்

பிரீத்தி பால் (Preethi Pal, பிறப்பு: 22, செப்டம்பர், 2000) என்பவர் ஒரு இந்திய இணை ஒலிம்பிக் தடகள வீரராங்கனை ஆவார்.[2] இவர் 2024 பாரிஸ் இணை ஒலிம்பிக்கில் மகளிருக்கான 100 மீ மற்றும் 200 மீ டி35 பந்தயங்களில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். மேலும் இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் தடம் மற்றும் கள போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றை உருவாக்கினார்.[3]

பிரீத்தி பால்
Pal in September 2024
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியா
பிறப்பு22 செப்டம்பர் 2000 (2000-09-22) (அகவை 24)
உத்தரப் பிரதேசம், இந்தியா [1]
விளையாட்டு
விளையாட்டுபாரா தடகளம்
மாற்றுத்திறனாளர்பெருமூளை வாதம்
மாற்றுத்திறன் வகைப்பாடுT35
நிகழ்வு(கள்)விரைவோட்டம்

துவக்ககால வாழ்க்கை

தொகு

இவர் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர். சிறுவயதிலேயே இவருக்கு பெருமூளை வாதம் இருந்தது, மீரட்டில் இவரால் சரியான சிகிச்சைப் பெறமுடியவல்லை. இவர் சிம்ரன் சர்மாவின் பயிற்சியாளரான கஜேந்திர சிங்கின் கீழ் தில்லியில் பயிற்சி பெறுகிறார்.[4]

தொழில்

தொகு

மே 2024 இல், யப்பானின் கோபியில் நடந்த உலக இணை ஒலிம்பிக் தடகள வாகையரில் வெண்கலம் வென்றார். மேலும் மகளிருக்கான டி35 200 மீ போட்டியில் 30.49 வினாடிகளில் ஓடி ஒலிம்பிக்கில் இடம் பெற்றார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூவில் நடந்த ஆசிய இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அவர் இரண்டு முறை ஒரு பதக்கத்தைத் தவறவிட்டார்.[5] முன்னதாக மார்ச் 2024 இல், பெங்களூரில் நடந்த உள்நாட்டு 6வது இந்திய ஓபன் பாரா தடகள வாகையர் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.[6]

 
2024 கோடை பாராலிம்பிக்சில் வெண்கலப் பதக்கம் பெறுதல்

2024 ஆம் ஆண்டு பாரிசில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றார்.[4] மேலும் மகளிருக்கான 100மீ டி35 பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Sportstar, Team (30 August 2024). "Paralympics 2024: Preethi Pal wins bronze in women's 100m T35, first medal for India in track event at Para Games". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 August 2024.
  2. "Who is Preeti Pal? The first Indian to secure a para-athletics medal at the Paralympics". The Times of India. 31 August 2024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/sports/paris-paralympics/who-is-preeti-pal-the-first-indian-to-secure-a-para-athletics-medal-at-the-paralympics/articleshow/112939937.cms#:~:text=Preeti%20Pal%20has%20made%20history,best%20time%20was%2014.21%20seconds.. 
  3. "Preethi Pal creates history with second athletics medal at Paris Paralympics". The Times of India. 2 September 2024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/sports/paris-paralympics/preethi-pal-creates-history-with-second-athletics-medal-at-paris-paralympics/articleshow/112974166.cms. 
  4. 4.0 4.1 "Preethi clinches bronze, secures Paralympics quota at World Para Athletics Championships". The Times of India. 19 May 2024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/preethi-clinches-bronze-secures-paralympics-quota-at-world-para-athletics-championships/articleshow/110253163.cms. 
  5. Desk, The Bridge (19 May 2024). "Preethi Pal secures India's first medal in women's 200m at Para Athletics C'ships". thebridge.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 August 2024.
  6. Sportstar, Team (18 May 2024). "World Para Athletics Championships 2024: Praveen finishes fourth in High Jump, Preethi qualifies for final". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 August 2024.
  7. "Preethi Pal's Stunning Run That Earned India Historic 100m Medal At Paris Paralympics - Watch | Olympics News". NDTVSports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தி_பால்&oldid=4126303" இலிருந்து மீள்விக்கப்பட்டது