பிரேசிலிய ரெயால்
ரெயால் (/reɪˈɑːl/; பிரேசிலிய போர்த்துக்கேயம்: ரெயாவ்; பன்மை ரெயாயிசு) பிரேசிலின் புழக்கத்திலுள்ள நாணயம் ஆகும். இதன் குறியீடு R$ மற்றும் ஐ.எசு.ஓ குறியீடு BRL ஆகும். ஒரு ரெயால் 100 சென்டவோசாக ("நூற்றிலொன்று") பகுக்கப்பட்டுள்ளது.
ரெயாவ் பிரேசிலீரோ (போர்த்துக்கேயம்) | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | BRL (எண்ணியல்: 986) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
பன்மை | ரெயாயிசு |
குறியீடு | R$ |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | சென்டவோ |
வங்கித்தாள் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | R$2, R$5, R$10, R$20, R$50, R$100 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | R$1 (2006இலிருந்து நிறுத்தம்) |
Coins | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 5, 10, 25, 50 சென்டவோசு, R$1 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 1 சென்டவோ (2006இலிருந்து நிறுத்தம்) |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | பிரேசில் |
வெளியீடு | |
நடுவண் வங்கி | பிரேசிலிய நடுவண் வங்கி |
இணையதளம் | www |
அச்சடிப்பவர் | காசா டா மோடா டொ பிரேசில் |
இணையதளம் | www |
காசாலை | காசா டா மோடா டொ பிரேசில் |
இணையதளம் | www |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 5.84%, 2012 |
ஆதாரம் | பிரேசில் நடுவண் வங்கி |
முறை | நுகர்வோர் விலைக் குறியீடு |
இப்போது புழக்கத்திலிருக்கும் ரெயால் 1994 இல் பழைய நாணயத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. முப்பதாண்டுகளாக வளர்ந்து வந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை சீர்திருத்தத்தின் அங்கமாக புதிய நாணயம் வெளியிடப்பட்டது. அமெரிக்க டாலருக்கு இணையான நாணயமாற்று வீதத்தில் (1:1) வெளியிடப்பட்ட இந்தப் புதிய நாணயம் 1999இல் 2:1 ஆகவும் 2002இல் கிட்டத்தட்ட 4:1 ஆகவும் மதிப்பிறங்கியது. பின்னர் பொருளியல் வளர்ச்சியால் 2006இல் மீளவும் 2:1 நிலையை எட்டியது. திசம்பர் 31, 2013இல் நாணய மாற்றுவீதம் ஒரு அமெரிக்க டாலருக்கு 2.36 பிரேசிலிய ரெயாலாக இருந்தது.
டாலரைப் போன்ற, இரட்டை நெடுங்கோடுகளை உடைய சிஃப்ரோ குறியீடு () மூலம் குறிக்கப்படுகிறது.[3] இருப்பினும் ஒருங்குறி இதனை எழுத்துரு வடிவத்தின் வேறுபாடாகவே கருதி தனி குறியீட்டை வழங்கவில்லை.[4]
மேற்சான்றுகள்
தொகு- ↑ Brazil new 50- and 100-real notes confirmed பரணிடப்பட்டது 2014-01-16 at the வந்தவழி இயந்திரம் BanknoteNews.com. Retrieved 2011-10-20.
- ↑ Rodrigues, Lorenna (February 3, 2010). "BC lança nova família de notas do real em tamanhos diferentes [Central Bank to launch new banknote series]" (in Portuguese). Folha de S. Paulo. http://www1.folha.uol.com.br/folha/dinheiro/ult91u688662.shtml. பார்த்த நாள்: 2010-02-03.
- ↑ "Origem do Cifrão". Casa de Moeda do Brasil. Archived from the original on 2014-01-16. பார்க்கப்பட்ட நாள் 2014-06-24.
- ↑ "C0 Controls and Basic Latin Range: 0000–007F" (PDF). The Unicode Standard, Version 6.2. The Unicode Consortium. பார்க்கப்பட்ட நாள் 19 September 2013.Unicode 0024 DOLLAR SIGN= milréis, escudo, used for many peso currencies in Latin America and elsewhere, glyph may have one or two vertical bars