பிரேம் சந்த் குப்தா
இந்திய அரசியல்வாதி
பிரேம் சந்த் குப்தா (Prem Chand Gupta)(பிறப்பு: பிப்ரவரி 3, 1950) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார்.[1] இவர் பீகாரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.[2] முன்னதாக, இவர் சார்கண்ட் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] நிலக்கரி ஊழலில் இவருக்கு தொடர்பு இருந்தது.[4] முன்பு ஆங்காங்கில் வசித்த இந்தியராக இருந்தார். இவர் இந்தியாவில் கடிகாரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை ஊக்குவித்தார் (இந்தோ சுவிசு கைக்கடிகாரங்கள்). பின்னர் அரசியலில் ஈடுபட்ட இவர் தற்போது புது தில்லி தெற்கு விரிவாக்கத்தில் வசிக்கிறார்.
பிரேம் சந்த் குப்தா | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 10 ஏப்ரல் 2020 | |
தொகுதி | பீகார் |
பதவியில் 10 ஏப்ரல் 2014 – 9 ஏப்ரல் 2020 | |
பின்னவர் | சிபு சோரன் |
தொகுதி | சார்க்கண்டு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 பெப்ரவரி 1950 பிவானி, பஞ்சாப், இந்தியா (தற்பொழுது அரியானா, இந்தியா) |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Prem Chand Gupta | National Portal of India". Archived from the original on 27 December 2017. பார்க்கப்பட்ட நாள் 10 December 2016.
- ↑ "Rajya Sabha elections: All five candidates in Bihar elected unopposed". Times Now. 18 March 2020. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
- ↑ . 31 January 2014.
- ↑ . 2014-08-02.