பிரைம் பெயிஜசு
பிரைம் பெயிஜசு (The PrimePages) என்பது, பகா எண்கள் குறித்த இணையதளம். இத்தளம் முதலில், டென்னிசி மாகாணத்தின் மார்ட்டின் மாவட்டத்திலுள்ள டென்னிசி பல்கலைக்கழகத்தில், கிறிஸ் கால்டுவெல் என்பாரால் உருவாக்கப்பட்டது.[2] அவர் இத்தளத்தை 1994 முதல் 2023 வரைப் பராமரித்து வந்தார்.
வலைத்தள வகை | கல்விசார் தரவுதளம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம் |
தோற்றுவித்தவர் | கிறிஸ் கால்டுவெல் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | சமர்ப்பித்தலுக்கு மட்டும் [1] |
தற்போதைய நிலை | செயலில் |
உரலி | t5k |
அறியப்பட்ட 5000 மிகப்பெரிய பகாஎண்களின் பட்டியல், சிறப்பு வடிவிலமைந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய பகாஎண்கள், வெவ்வேறுவகையான பகாஎண்களில் "முதல் இருபது" பட்டியல்கள் ஆகியவற்றை இத்தளம் பராமரித்து வருகிறது. ஜூலை ஆகஸ்ட், 2024 தரவின்படி, 5000 ஆவது பகாஎண்ணானது கிட்டத்தட்ட 601,000 இலக்கங்கள் கொண்டுள்ளது.[3]
பிரைம் பெயிஜசு தளத்தில், பகாஎண்கள் மற்றும் பகாஎண் மெய்யெறிவுதேர்வு குறித்த கட்டுரைகள் உள்ளன. பகாஎண்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான கட்டுரைகள் கொண்ட "பாகஎண் களஞ்சியம்" , குறிப்பிட்ட எண்கள் பற்றிய ஆயிரக்கணக்கான சிறப்புச் சேகரிப்புகள் ஆகியவையும் இத்தளத்தில் உள்ளன.
மார்ச் 11, 2023 முதல், இத்தளத்தின் இணைய முகவரி 'primes.utm.edu' இலிருந்து 't5k.org,' ஆக மாறியது. அதன்பின்னர் இத்தளமானது, கால்டுவெல்லாலும் பராமரிக்கப்படவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "PrimePages Privacy Statement". t5k.org. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி10, 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Chris Caldwell". University of Tennessee at Martin.
- ↑ "The Prime Database: Database Search Query". The PrimePages.. Retrieved on 2023-03-16.