பிரோலைசின்

பிரோலைசின் (Pyrrolysine) [குறுக்கம்: Pyl (அ) O] இயற்கையில் காணப்படும், பொதுமரபுக்குறியீட்டிலிருந்து நேரடியாகக் குறிமுறைச் செய்யப்படும் அமினோ அமிலமாகும். இது, சில மீத்தேனாக்கும் ஆர்க்கியா என்னும் ஒரு செல் பாக்டீரியாக்களில் உபயோகப்படுத்தப்படுகின்றது. மேலும், மீத்தேன் உருவாக்கும் வளர்சிதை மாற்றத்தில் பங்குபெறும் ஒரு கண்டறியப்பட்ட பாக்டீரிய நொதியத்திலும் காணப்படுகின்றது. இது, லைசின் அமினோ அமிலத்தைப் போலிருந்தாலும், லைசின் பக்கத் தொடரின் முடிவில் பிரோலின் வளையத்தைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட இடமாற்றும் ஆர் என் ஏ (tRNA) மற்றும் அமினோஅசைல் tRNA தொகுப்பியினால் உருவாக்கப்பட்டாலும், இந்த உயிரினங்களில் வழக்கத்திற்கு மாறானப் பொதுமரபுக்குறியீட்டிலிருந்து நேரடியாகக் குறிமுறைச் செய்யப்படும் அமினோ அமிலம் பிரோலைசினாகும். பிரோலைசின், புரதமாக்கும் அமினோ அமிலங்களில் இருபத்தியிரண்டாவதாகக் கருதப்படுகின்றது.

பிரோலைசின்
Pyrrolysine.svg
Pyrrolysine-3D-balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
N6-​{[(2R,​3R)-​3-​மீத்தைல்-​3,​4-​டைஹைட்ரோ-​2H-​பிரோல்-​2-​யில்]​கார்போனைல்}-​L-​லைசின்
இனங்காட்டிகள்
448235-52-7
ChemSpider 4574156 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C16138 Yes check.svgY
பப்கெம் 5460671
பண்புகள்
C12H21N3O3
வாய்ப்பாட்டு எடை 255.313 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

எக்ஸ் கதிர் படிகவியல்[1] மற்றும் பொருண்மை நிரலாய்வினைக் கொண்டு கணித்தபடி, பிரோலைசின், 4-மீத்தைல் பிரோலின்-5-கார்பாக்சிலேட் தொகுதி, லைசினின் ϵN- உடன் அமைடு பிணைப்பினால் இணைக்கப்பட்ட வடிவத்தினைக் கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்தொகு

  1. Bing Hao, Weimin Gong, Tsuneo K. Ferguson, Carey M. James, Joseph A. Krzycki, Michael K. Chan (2002-05-24). A New UAG-Encoded Residue in the Structure of a Methanogen Methyltransferase. 296. Science. பக். 1462–1466. doi:10.1126/science.1069556. பப்மெட்:12029132. http://www.sciencemag.org/cgi/content/full/296/5572/1462/F4. 
  2. Jitesh A. Soares, Liwen Zhang, Rhonda L. Pitsch, Nanette M. Kleinholz, R. Benjamin Jones, Jeremy J. Wolff, Jon Amster, Kari B. Green-Church, and Joseph A. Krzycki (2005-11-04). "The residue mass of L-pyrrolysine in three distinct methylamine methyltransferases". The Journal of biological chemistry (Journal of Biological Chemistry) 280 (44): 36962–36969. doi:10.1074/jbc.M506402200. பப்மெட்:16096277. http://www.jbc.org/content/280/44/36962.long. 

பிற மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரோலைசின்&oldid=1362746" இருந்து மீள்விக்கப்பட்டது