பிர்கே தொப்பி
பிர்கே தொப்பி (Birke topi) என்பது நேபாளத்தின் மேற்கு மலைப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் அணியும் பாரம்பரிய தொப்பி வகையாகும். பிர்கே டோபி அல்லது பானுபக்தா பாணி தொப்பி என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. கவிஞர் ஆதிகவி பானுபக்த ஆச்சார்யாவால் பிர்கே தொப்பி பிரபலப்படுத்தப்பட்டது.[1][2]
அமைப்பு
தொகுநேபாளத்தின் பாரம்பரிய பானைகளின் மூடியின் வடிவத்தில் உருளை வடிவமும் மேலே குப்பியும் கொண்டதாக இத்தொப்பி அமைந்துள்ளது. வழக்கமாக அச்சிடுதல் அல்லது பூத்தையல் இல்லாமல் கருப்பு நிறத்தில் கிடைக்கும். ஆனால் தற்போது பல வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளுடன் மற்ற வண்ணங்களிலும் கிடைக்கிறது. பார்ப்பதற்கு இமாச்சலி தொப்பியைப் போல காட்சியளித்தாலும் பிர்கே தொப்பியின் மேல் ஒரு குமிழ் இடம் பெறுகிறது.
நவீன பயன்பாடு
தொகுநவீன நேபாள சமுதாயத்தில் பிர்கே தொப்பியின் பயன்பாடு மிகவும் அரிதாக உள்ளது. மக்கள் பிர்கே தொப்பியை விட டாக்கா தொப்பி மற்றும் பத்கௌலே தொப்பி அணிவதை விரும்புகிறார்கள்.[3] பானுபக்த ஆச்சார்யாவின் ஆண்டுவிழா போன்ற சிறப்பு நிகழ்வுகளில் இந்த தொப்பி வழக்கமாக அணியப்படுகிறது.[4] கவிஞரின் நினைவாக, தனாகூன் மாவட்டத்தில் உள்ள ஆச்சார்யாவின் சொந்த ஊரான பானு நகராட்சியின் அதிகாரிகள் வேலை நேரத்தில் இந்த தொப்பியை அணிய முடிவு செய்தனர்.[5][6]
காட்சியகம்
தொகு-
பிர்கே தொப்பியுடன் மோதிராம் பாட்டா
-
தௌரா-சுருவால் மற்றும் பிர்கே தொப்பியுடன் இந்தியாவின் டார்ச்சிலிங்கில் உள்ள பானுபக்த ஆச்சார்யாவின் சிலை
-
பிர்கே தொப்பி அணிந்த பானுபக்த ஆச்சார்யாவின் நினைவு முத்திரை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "70% Subsidy provided to procure machine for making Bhanubhakta's Cap". GorakhaPatra (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
- ↑ "कता गयो बिर्खे टोपी ?". radiokantipur.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "बिर्खे टोपी लगाउने निर्णय कार्यान्वयन भएन, कर्मचारीलाई ढाका र चुच्चे टोपी नै प्यारो". Image Khabar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
- ↑ Setopati, सेतोपाटी संवाददाता. "कविहरूको शिरमा बिर्खे टोपी!". Setopati (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
- ↑ "Aadikabi Bhanu Jayanti today". GorakhaPatra (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
- ↑ "Employees at Bhanu municipality start wearing Bhanubhakta-era cap". Salleri Khabar (in ஆங்கிலம்). Archived from the original on 2021-11-04. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.