பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகம்

பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகம் (Birsa Munda Tribal University) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தின் தலைமையிடமான ராஜ்பிப்லாவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகம் ஆகும் . இப்பல்கலைக்கழகம் அக்டோபர் 4, 2014-ல் நிறுவப்பட்டது. அப்போதைய பழங்குடியினர் நலத்துறை அமைச்சரான ஷப்தாஷரன் தத்வி இதனை முறையாகத் தொடங்கி வைத்தார்.[1][2][3][4][5]

பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்1 ஏப்ரல் 2017
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்http://bmtu.ac.in/

வரலாறு தொகு

பழங்குடியின போராளியான பிர்சா முண்டா நினைவாக, பழங்குடியினர் அதிகமாக உள்ள நர்மதா மாவட்டத்தின் தலைமையிடமான ராஜ்பிப்லாவில் பிர்சா முண்டா பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இது அகமதாபாத் நகரத்திற்கு தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கல்வி தொகு

கலை, வணிகம், அறிவியல், பாரம்பரிய கலை, திறன், மூலிகை மருத்துவ அறிவு, சமசுகிருதம் உள்ளிட்ட பல பாடங்களில் பட்டப்படிப்பு, முதுகலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Birsa Munda Tribal University Inaugurated In Narmada District".
  2. "Birsa Munda Tribal University inaugurated in Narmada district". m.indiatoday.in.
  3. "Gujarat Assembly passes bill for setting up Birsa Munda Tribal University at Rajpipla". 22 March 2017.
  4. India, Press Trust of (15 October 2017). "Birsa Munda Tribal University inaugurated" – via www.thehindu.com.
  5. "गुजरात में बिरसा मुंडा विश्वविद्यालय का उद्घाटन".