பிரம்மன் கோயில் (இந்தியா)

(பிர்மன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்த கோயில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் நகரின் மையத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பிரம்மன் கோயில் உள்ள ஒரே இடம். இக்கோயில் வேத நாராயணன் கோயில், பிர்மன் கோயில், பிரம்மன் கோயில் என வழங்கப்படுகிறது. நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தல வரலாறு

தொகு

படைக்கும் கடவுளான பிரமனுக்கு தனிக்கோவில் உலகில் இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. ஒன்று கும்பகோணம், இரண்டாவது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புஷ்கர். மகாபிரளயத்தில் கும்பகோணத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து பூசித்து ஈசனுக்கு முதல் விழா எடுத்தவர் பிரம்மன். இவர் மகாவிஷ்ணுவின் தொப்புள் கொடியில் இருந்து உதித்தவர். உலகில் உள்ள அனைத்தையும் படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு உலக உயிர்கள் எல்லாம் உருவானதற்கு தாம் தான் காரணம் என்ற கர்வம் வந்தது. பிரம்மனின் கர்வம் கண்டு கோபம் கொண்ட மகாவிஷ்ணு பிரம்மனை அழைத்து படைக்கும் தன்மையை நீ இழப்பாய் என சாபம் கொடுத்தார். தவறை உணர்ந்த பிரமதேவர் கும்பகோணம் வந்து தவம் மேற்கொண்டு அஸ்வமேத யாகம் செய்தார். மகிழ்ந்த மகாவிஷ்ணு நான்கு வேதங்களின் உட்பொருளையும் மகிமையும் பிரம்மனுக்கு விளக்கி சாபவிமோசனம் கொடுத்து இங்கேயே கோவில் கொள்ளுமாறு அருளினார். அவ்வாறே தன் தேவியறோடும் பிரம்மனின் வேண்டுகோளுக்கு இணங்கி மகாவிஷ்ணு வேத நாராயணபெருமாள் என்ற திருநாமத்துடன் கோவில் கொண்ட இடமே இந்த பிரம்மன் கோவில்.

மேற்கோள்கள்

தொகு