பிறிசிலியன்

ரோமானிய ஆயர்

பிறிசிலியன் (Priscillian, இறப்பு: 385) பண்டைய உரோமையைச் சேர்ந்த இறையியலாளரும், எசுப்பானியாவின் ஆவிலா நகரின் ஆயராக இருந்தவரும் ஆவார்.

இவர் கிறித்தவ திருச்சபையால் திரிபுக் கொள்கைக்காக (Heresy) மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். முதன் முதலில் திரிபுக் கொள்கைக்காக கிறித்தவர்களால் கொல்லப்பட்டவர் இவரே. இவர் சூனியம், மாந்திரீகம் போன்றவற்றில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு அரசனின் அவையால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இத்தண்டனையினை டிரயர், செருமணியில் கூடிய மன்றம் உறுதிசெய்தது.

கிறித்துவ நம்பிக்கை சார்ந்தவற்றில் ஓர் ஆயரைத் தீர்ப்பிட அரசனுக்கோ, மன்றத்துக்கோ உரிமையில்லை எனக்கூறி மிலன் நகரின் ஆயரான அம்புரோசு, திருத்தந்தை சிரீசியஸ் மற்றும் தூர் நகர மார்ட்டின் ஆகியோர் தண்டனையைக் குறைக்க முயன்றனர். ஆயினும் இவரும் இவரைப் பின்பற்றியவர்களும் கிபி 385 அல்லது 386 இல் தலை வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.[1] இவர்களது மரணதண்டனை பின்னர் பல நூற்றாண்டுகளாக கிறித்துவ சமயத் திரிபுக் கொள்கையினருக்கு தண்டனையாக மரண தண்டனை விதிக்க முன்மாதிரியாக அமைந்தது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Who was Priscillian of Avila?
  2. J. B. Bury. (1913). Freedom of Thought. New York: Holt and Company.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறிசிலியன்&oldid=2707289" இலிருந்து மீள்விக்கப்பட்டது