பிறேமன் தமிழ் கலை மன்றம்
பிறேமன் தமிழ் கலை மன்றம் ஜெர்மனியில் பிறேமன் நகரில் உள்ளது.
ஈழத்தமிழரின் கலை பண்பாடு மறக்கப் படக் கூடாது. அதை இளைய சந்ததிக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதன் மூலம் அவர்களை எமது கலைகளில் ஈடுபடச் செய்து இலை மறை காயாக இருக்கும் கலைஞர்களை வெளிக் கொணர வேண்டும் என்ற நோக்கத்தையும், விருப்பத்தையும் நிறைவேற்ற ஒரு கலைமன்றம் வேண்டும் என்ற எண்ணம் 1992 மே மாதமளவில் நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்களுக்கு வந்தது. அவரது அந்த எண்ணத்தையும், விருப்பத்தையும் துண்டுப்பிரசுரமாக்கியும், பூவரசு சஞ்சிகையில் வேண்டுகோளாகவும் விடுத்திருந்தார். அதற்கமைய 3 ஜூலை 1992 இல், 18 கலை ஆர்வலர்கள் இணைந்து கொண்ட கூட்டத்தில் பிறேமன் தமிழ் கலை மன்றம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளில் 12 ஆண்டுகள் இளையோருக்கான தமிழார்வப் போட்டிகளை மன்றம் நடாத்தியுள்ளது திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மனனம், பேச்சு, பாடல், அறிவிப்பு போட்டிகள்.
இளவேனிற் கலைவிழா, ஆண்டுவிழாக்களில் நடனம், நாடகம், பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவை அரங்கேற்றப் பட்டன. 2005 இல் இருந்து பொங்கல் விழா என்று இதன் செயற்பாடுகள் அமைந்துள்ளன.