பிலாபாண்ட் லா கணவாய்

பிலாபாண்ட் லா (Bilafond La) என்பது சால்டோரா முகட்டில் அமைந்திருக்கும் ஒரு மலைக் கணவாய் ஆகும். பட்டாம்பூச்சிகள் கணவாய், சால்டோரா கணவாய் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. மிகப்பரந்த சியாச்சின் பனிமலைக்கு மேற்கில் என் யே 980420 என்ற வரைபடப் புள்ளிக்கு நேர் வடக்கில் 40 கிலோமீட்டர் தொலைவில் இக்கணவாய் அமைந்துள்ளது.

பிலாபாண்ட் லா
ஏற்றம்5,450 மீ (17,881 அடி)
அமைவிடம்இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது, பாகித்தான் பிரச்சனைக்குரியது[1][2]
மலைத் தொடர்கிழக்கு காரகோரம் மலைத்தொடர்
ஆள்கூறுகள்35°23′N 76°57′E / 35.383°N 76.950°E / 35.383; 76.950
ஐக்கிய நாடுகளின் கட்டுபாடு கோட்டின் வரைப்படம்.பிலாபாண்ட் லா கணவாய் மற்றும் சியா லா கணவாய்க்கு வடக்கே வரைப்பட புள்ளி என். யே 980420 -இல் தெரிகிறது.

1972-ல் இந்தியா மற்றும் [[பாக்கித்தான் இடையே ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு நாடுகளின் கட்டுப்பாட்டு கோட்டின் எல்லை முடிவாக இக்கணவாய் வரையறுக்கப்படுகிறது. மேலும், பிலாபாண்ட் லா கணவாய் பிரிக்கப்படாத இந்தியா மற்றும் சீனாவை இணைக்கும் தொண்மையான பட்டுச்சாலையின் மேல் அமைந்துள்ளது[3].

1984 -இல் இந்தியா மற்றும் பாக்கித்தான் இடையே சியாச்சின் கைப்பற்றல் காரணமாக துவங்கிய இராணுவ நடவடிக்கையில் இக்கணவாய் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது.

பிலாபாண்ட் லா கணவாயை இந்திய ராணுவம் 1984-இல் வடக்கில் சியா லா கணவாயுடன் சேர்த்துக் கைப்பற்றியது. மேலும் 1987-இல் தெற்கில் உள்ள கயாங் லா கணவாயையும் கைப்பற்றியது [2]. இந்தியா தற்பொழுது பிலாபாண்ட் லா-கணவாயில் தன்னுடைய இராணுவ மையம் ஒன்றை பராமரிக்கிறது [4].

பூகோள-அரசியல் சர்ச்சைகள்

தொகு

சியாச்சின் பனியாறை பிடிக்கும் இந்திய இராணுவத்தின் மேகதூது இராணுவ செயல்முறையின் போது சியா லா கணவாய் மட்டுமல்லாது, அதன் அருகிலுள்ள கயாங் லா மற்றும் பிலாபாண்ட் லா கணவாய்களிலும் இராணுவ நடவடிக்கைகள் 1984- ஆம் ஆண்டில் துவங்கின. இது சியாசென் பூசலில் ஏற்பட்ட முதல் இராணுவ நடவடிக்கையும் மற்றும் மிகப் பெரிய காசுமீர் பூசலின் ஒரு பகுதியும் ஆகும். இந்த கணவாய்கள் அனைத்தும் தற்போது இந்தியா வசம் உள்ளது[5]. இது மிகப்பெரிய காசுமீர் பிரச்சனையின் ஒரு பகுதியாகும். இக்கணவாய் போர் திறன் சார்ந்த சியாச்சின் பகுதியின் மேற்கே மற்றும் இந்தியா – பாக்கித்தானின் தற்போதைய கோட்டின் அருகே அமைந்துள்ளதால் இந்திய ராணுவம் அவ்விடத்தை பாதுகாக்க எப்பொழுதும் அவ்விடத்தில் முகாமிட்டு இருக்கின்றது [6].

மேற்கோள்கள்

தொகு
  1. Baghel, Ravi; Nusser, Marcus (2015-06-17). Political Geography Vol. 48. ed. Securing the heights; The vertical dimension of the Siachen conflict between India and Pakistan in the Eastern Karakoram. Elsevier. பக். 31–32. doi:10.1016/j.polgeo.2015.05.001. http://www.sciencedirect.com/science/article/pii/S0962629815000347. பார்த்த நாள்: 2016-09-23. 
  2. 2.0 2.1 Wirsing, Robert (1991). Pakistan's security under Zia, 1977-1988: the policy imperatives of a peripheral Asian state. Palgrave Macmillan, 1991. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-06067-1.
  3. "The Tribune, Chandigarh, India - Opinions". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 11 August 2017.
  4. Child, Greg (1998). Thin air: encounters in the Himalayas. The Mountaineers Books, 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89886-588-2.
  5. Barua, Pradeep P. (30 June 2005). The State at War in South Asia (Studies in War, Society, and the Military). University of Nebraska Press. pp. 253–255. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8032-1344-9. பார்க்கப்பட்ட நாள் 2009-08-06.
  6. "BHARAT RAKSHAK MONITOR - Volume 6 (1) July-August 2003". Web.archive.org. 14 June 2012. Archived from the original on 14 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலாபாண்ட்_லா_கணவாய்&oldid=3869257" இலிருந்து மீள்விக்கப்பட்டது