பிலாவல் பட்டி
பிலாவல் பட்டி (Bilawal Bhatti பிறப்பு 17 செப்டம்பர் 1991, புரேவாலா ) [1]
இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். மேலும் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் , பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2008 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2009 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச அளவில் பாக்கித்தான் அணியின் சார்பாக விளையாடினார். இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 2083 ஓட்டங்களையும் , பட்டியல் அ போட்டிகளில் 502 ஓட்டங்களையும் எடுத்தார். மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணி , பாக்கித்தான் அ அணி சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார். தனது அறிமுக ஒருநாள் போட்டியில் இவர் பாக்கித்தான் அணியின் வெற்றிக்கு உதவினார்.
2015–16 குவைத் -இ-அசாம் கோப்பைக்கான இறுதிப் போட்டியில், பட்டி முதல் தர கிரிக்கெட்டில் தனது 88 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 8 இலக்குகளைப் பதிவு செய்தார்.[2]
துடுப்பாட்ட வாழ்க்கை
தொகுநவம்பரில், சீனாவின் குவாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பட்டி பாக்கித்தான் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.[3] இதில் 3 வது இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் இலங்கையை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
முதல் தரத் துடுப்பாட்டம்
தொகு2009 ஆம் ஆண்டில் இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2009 இல் நடைபெற்ற குவைத் -இ- அசாம் துடுப்பாட்டக் கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார்.பெப்ரவரி 4, சியல்கோட் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற லாகூர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இவர் 22 ஓவர்கள் வீசி 87 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். 1 ஓவர்களை மெய்டனாக வீசி 4 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 19 பந்துகளில் 8 ஓட்டங்கள் எடுத்து அகமது பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 15 ஓவர்கள் வீசி 51 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 4 ஓவர்களை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[4]
பட்டியல் அ
தொகுஇவர் 2008 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.
சர்வதேசப் போட்டிகள்
தொகு2013 ஆம் ஆண்டில் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2013 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவமப்ர் 24, கேப்டவுன் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 25 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து மோர்கல் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி 37 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். அதில் 3 இலக்குகளையும் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 23 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[5]
குறிப்புகள்
தொகு- ↑ Biography cricinfo. Retrieved 28 November 2010
- ↑ "SNGPL edge ahead after Bhatti eight-for". ESPNCricinfo. 5 January 2016. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016.
- ↑ Squad for Asian Games cricinfo. Retrieved 28 November 2010
- ↑ "Full Scorecard of Sialkot vs Lahore Ravi, Quaid-e-Azam Trophy, Group B - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
- ↑ "Full Scorecard of South Africa vs Pakistan 1st ODI 2013 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.