பிலிபெர்ட் யாக்குவசு மெலோத்தி
676 மெலித்தா | 16 ஜனவரி 1909 | MPC |
பிலிபெர்ட் யாக்குவசு மெலோத்தி (Philibert Jacques Melotte) (29 சனவரி 1880 – 30 மார்ச்சு 1961) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவரது பெற்றோர் பெல்ஜியத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.[2]
இவர் 1908 இல் இன்று பசிப்பயே என்று கூறும் வியாழனின் நிலா ஒன்றைக் கண்டுபிடித்தார். இது அப்போது "வியாழன் எட்டு" எனப்பட்டது. 1975 இல் தான் பசிப்பயே எனும் பெயர் வழங்கப்பட்டது. 676 மெலித்தா எனும் புற முதன்மைப் பட்டை சிறுகோள் ஒன்றை இவர் கண்டுபிடித்தார்.[1] இது ஆட்டிக் வடிவ கிரேக்கத்தில் தேனீ எனப் பொருள்படும் மெலிசா என அழைக்கப்பட்டாலும் இது கண்டுபிடிப்பாளரின் பெயரோடு ஒன்றுவது தற்செயலானதே.[3]
கோமா பெர்னிக்கிள்சு எனப்படும் விண்மீன்குழுவில் அமைந்ததாகக் கருதப்படும் விண்மீன் கொத்து 1915 ஆண்டைய மெலோத்தி விண்மீன் கொத்துகளுக்கான அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தமையால் வழக்கமாக மெல்111 அழைக்கப்படுகிறது,[4] ஆனல், இது சார்லசு மெசியரின் பெயர்பெற்ற ஆழ்னாபொருட் பட்டியலிலோ அல்லது புதிய வான்பொருட் பட்டியலிலோ, இது 1938 வரை அமையவில்லை. ஏனெனில், இது 1938 இல் தான் இராபெர்ட் யூகியசு டிரம்பிளரால் கண்டறியாப்பட்டது.[5]
இவருக்கு 1909 இல் அரசு வானியல் கழகம் ஜாக்சன் குவில்ட்டு பதக்கத்தை வழங்கியது. இவரது ஆய்வுரைகளின் திரட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 22 June 2016.
- ↑ Hunter, A. (March 1962). "Obituary Notices: Philibert Jacques Melotte". Quarterly Journal of the Royal Astronomical Society 3: 48. Bibcode: 1962QJRAS...3...48.. http://articles.adsabs.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?1962QJRAS...3...48.&data_type=PDF_HIGH&whole_paper=YES&type=PRINTER&filetype=.pdf. பார்த்த நாள்: 22 June 2016.
- ↑ Schmadel, Lutz D. (2007). "(676) Melitta". Dictionary of Minor Planet Names – (676) Melitta. Springer Berlin Heidelberg. p. 66. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-540-29925-7_677. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3.
- ↑ Melotte, P. J. "A Catalogue of Star Clusters shown on Franklin-Adams Chart Plates", MmRAS, 1915
- ↑ The Coma Berenices star cluster பரணிடப்பட்டது 2007-06-17 at the வந்தவழி இயந்திரம் (Melotte 111)