பிலிப்பீன்சு அரசியலமைப்பு
பிலிப்பீன்சு அரசியலமைப்பு (Constitution of the Philippines), பரவலாக 1987 அரசியலமைப்பு, பிலிப்பீன்சு நாட்டின் அரசமைப்புச் சட்டம் அல்லது மிக உயரிய சட்டம் ஆகும். இது 1987இல் பிலிப்பீன்சின் குடியரசுத் தலைவர் கொரசோன் சி. அக்கினோ ஆட்சிக்காலத்தில் சட்டமாக்கப்பட்டது.[1]
பிலிப்பீன்சு அரசமைப்புச் சட்டம் | |
உருவாக்கப்பட்டது | அக்டோபர் 15, 1986 |
நிறைவேற்றம் | பெப்ரவரி 2, 1987 |
இடம் | பிலிப்பீன்சு கீழவை ஆவணக்காப்பகம் குவிசோன் நகரம் |
வரைவாளர் | 1986ஆம் ஆண்டு அரசமைப்புக் குழு |
கைச்சாத்திட்டோர் | 50 பேராளர்களில் 46 பேர் ஒப்பிட்டனர் |
நோக்கம் | அரசுத்தலைவரின் அறிக்கை எண். 3க்கு மாற்றாக தேசிய அரசமைப்புச் சட்டம் |
இதற்கு முன்னதாக மூன்று அரசியலமைப்புச் சட்டங்களுக்கு கீழ் நாடு இயங்கி வந்துள்ளது — 1935 பொதுநலவாய அரசியலமைப்பு, 1973 அரசியலமைப்பு, மற்றும் 1986 விடுதலை அரசியலமைப்பு.[2][3] இவற்றைத் தவிர குறைந்த காலமே ஆட்சியிலிருந்த இரு போர்க்கால அரசுகளும் இரண்டு அரசியலமைப்புச் சட்டங்களை பின்பற்றின: பிலிப்பீனியப் புரட்சி போது எமிலியோ அகுனல்டோ தலைமையிலான புரட்சிகரப் படைகள், இரண்டாம் உலகப் போரின் போது சப்பானிய ஆக்கிரமிப்பின்போது ஒசே பி. இலாரல் தலைமையிலான அரசு.
1987ஆம் ஆண்டு அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்
தொகுமுகவுரை
தொகுஅரசியலமைப்பின் முகவுரைப் பகுதி இச்சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது; இயற்றியோர், அடிப்படைச் சட்டங்களின் நோக்கம், சட்டத்தை புரிந்துகொள்ளுவதற்கான உதவிகள், அரசின் நோக்குகளை விவரிக்கின்றது.
அரசியலமைப்பு முகவுரையைத் தவிர்த்து சட்டக்கூறு எனப்படும் 18 பாகங்களை கொண்டுள்ளது.
- சட்டக்கூறு I - தேசிய ஆள்புலம்
பிலிப்பைன்சு ஓர் தீவுக்கூட்டம் என்றும் பிலிப்பீன்சின் ஆள்புலம் தீவுகளையும் தொடர்புடைய நீர்ப்பகுதிகளையும் உள்ளடக்கியது என்றும் விவரிக்கின்றது. பிலிப்பீன்சிற்கு இறையாண்மை அல்லது அதிகாரம் உள்ள பகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தீவுக்கூட்டங்களின் தீவுகளுக்கு இடையே உள்ள நீர்ப்பகுதிகள் உள்நாட்டு நீர்ப்பகுதிகளாக கொள்ளப்படுகின்றன.
- சட்டக்கூறு II - கொள்கைகள் மற்றும் அரசுக் கொள்கைகளின் அறிவிக்கை
நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் கொள்கைகளை முன்மொழிகின்றது. குறிப்பாக அரசியலமைப்பின் செயலாக்கம், அரசின் நோக்கங்கள், அடிப்படைச் சட்டங்களின் குறிப்பிட்ட புரிதல்களின் விளக்கங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. சில முன் ஒதுக்குகைகள்:
- பிலிப்பீன்சு ஓர் சனநாயக, குடியரசு நாடு (பிரிவு 1)
- போர் மறுப்பு (பிரிவு 2)
- குடிமை அதிகாரத்தின் உயர்வு (பிரிவு 3)
- குடிமக்கள் செய்யவேண்டிய சேவைகள் (பிரிவு 4)
- திருச்சபை, அரசு பிரிப்பு (பிரிவு 6)
- தன்னதிகாரமுள்ள பிலிப்பீனிய வெளியுறவுக் கொள்கை (பிரிவு 7)
- அணுவாயுதத்திலிருந்து விடுதலை (Section 8)
- நேர்மையான, இயங்கு சமூக அமைப்பு மற்றும் சமூக நீதி (பிரிவு 9 & 10)
- அடிப்படை தன்னாட்சி அலகான குடும்பம் (பிரிவு 12)
- நாட்டுக் கட்டமைப்பில் இளைஞர், மகளிரின் பங்கு (பிரிவு 13 & 14)
- உழைப்பை "முதன்மை சமூகப் பொருளியல் விசையாக" உறுதியுரை (பிரிவு 14)
- சட்டக்கூறு III - உரிமைகள்
குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள். இவை பெரும்பாலும் அமெரிக்க அரசியலமைப்பை ஒத்துள்ளன:
- முறையான செயல்முறை (due process) மற்றும் சமவுரிமை பாதுகாப்பு
- தேவையற்ற தேடுதல்களுக்கும் கைப்பற்றுகைகளுக்கும் எதிரான உரிமை
- கட்டற்ற பேச்சுக்கான உரிமை மற்றும் விரும்பிய சமயத்தை பின்பற்ற உரிமை,
- தானாக குற்றம் ஒப்புதலுக்கு எதிரான உரிமை
- ஆட்கொணர்வு ஆணைக்கான உரிமை.
இந்த உரிமைகளின் வீச்சையும் கட்டுப்பாடுகளையும் பிலிப்பீனிய உச்சநீதி மன்றம் தீர்மானிக்கும்.
- சட்டக்கூறு IV - குடியுரிமை
பிலிப்பினோ மக்களின் குடியுரிமை இங்கு விவரிக்கப்படுகின்றது; இரண்டு வகையான குடிமக்கள் வரையறுக்கப்பட்டுள்ளனர்:
- இயற்கை-பிறப்பு குடிமக்கள் - பிலிப்பீன்சில் பிறந்த குடிமக்கள். இவர்களுக்கு வாக்குரிமையும் அரசுப் பதவிகளுக்கு போட்டியிடும் உரிமையும் உண்டு.
- ஏற்பு குடிமக்கள் - வெளிநாட்டவர்கள், தன்னிச்சையாகவோ சட்ட இயக்கத்தினாலோ பிலிப்பீன்சின் குடிமக்களானவர்கள்
- சட்டக்கூறு V - வாக்குரிமை
குடிமக்களின் தகுதி மற்றும் உரிமையை வரையறுக்கின்றது. தேர்தல் அமைப்பும் வாக்குச்சீட்டின் இரகசியம், வாக்களிக்காதிருத்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எழுத்தறிவில்லாதவர்கள் வாக்களிக்கும் முறைமை விவரிக்கப்பட்டுள்ளன.
- சட்டக்கூறு VI- சட்டவாக்குத் துறை
மேலவை, கீழவை உறுப்பினர்களின் பொதிவு, தகுதி மற்றும் பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அமைப்பு, செயல்முறைகள், தேர்தல் மற்றும் தலைமை அதிகாரிகள் விவரிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தின் அதிகாரங்களில் இவை உள்ளன:
- சட்டவாக்கத்திற்கு துணையாக புலனாய்வு அல்லது விசாரணை மேற்கொள்ளுதல் (பிரிவு 21)
- போர் நிலையை அறிவிக்கும் அதிகாரம் (பிரிவு 26)
- நிதிய அதிகாரம் (பிரிவு 25)
- உட்பொதிந்த அதிகாரம்:காவல் அதிகாரம் (பிரிவு 1), வரிவிதிப்பு அதிகாரம் (பிரிவு 28), தனியார் சொத்தெடுப்புரிமை அதிகாரம் (பிரிவு 9)
- சட்டக்கூறு VII - செயலாக்கத் துறை
- சட்டக்கூறு VIII - நீதித் துறை
- சட்டக்கூறு IX - அரசமைப்பு ஆணையம்
- குடியாட்சி ஆணையம்
- தேர்தல் ஆணையம் (COMELEC)
- தணிக்கை ஆணையம்
- சட்டக்கூறு X - உள்ளாட்சி அரசு
- சட்டக்கூறு XI - பொதுத்துறை அதிகாரிகளின் பொறுப்புக்கள்
- சட்டக்கூறு XII - தேசிய பொருளாதாரம் மற்றும் முதுசொம்
- சட்டக்கூறு XIII - சமூகநீதி மற்றும் மனித உரிமைகள்
- சட்டக்கூறு XIV - கல்வி, அறிவியல் மற்றும் தொழினுட்பம், கலை, பண்பாடு மற்றும் விளையாட்டுக்கள்
- சட்டக்கூறு XV - குடும்பம்
- சட்டக்கூறு XVI - பொது ஒதுக்கைகள்
- சட்டக்கூறு XVII - திருத்தங்களும் மாற்றமைத்தல்களும்
- சட்டக்கூறு XVIII - தற்கால ஒதுக்கைகள்
மேற்சான்றுகள்
தொகு- ↑ "The 1987 Constitution of the Republic of the Philippines". October 15, 1986. Archived from the original on 2012-03-09. பார்க்கப்பட்ட நாள் 2008-04-03.
- ↑ Isagani Cruz (1993). Constitutional Law. Quezon City, Philippines: Central Lawbook Publishing Co., Inc. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-16-0184-2.
- ↑ Joaquin Bernas, S.J. (1996). The 1987 Constitution of the Republic of the Philippines: A Commentary. Manila, Philippines: Rex Book Store. pp. xxxiv–xxxix. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-23-2013-8.