பிலோமினா

இந்திய நடிகை (1926-2006)

பிலோமினா (Philomina) (1926 முதல் 2 சனவரி 2006) மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தனது திரையுலக வாழ்க்கையில் 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் மேடை நாடகங்களில் அனுபவம் பெற்றிருந்தார் இதன் காரணமாக திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.[2] 1991 ஆம் ஆண்டு வெளியான காட்பாதர் என்ற திரைப்படத்தில் அனப்பர அச்சம்மா என்ற கதாபாத்திரம் மூலம் தனது சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார்.[3]

பிலோமினா
பிறப்பு1926 (1926)
கேரளா மாநிலம்
திருச்சூர் மாவட்டம்
முள்ளூர்கர
இறப்பு2 சனவரி 2006(2006-01-02) (அகவை 79–80)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1964–2003
பெற்றோர்தேவசி (தந்தை)
மரியா (தாயார் )
வாழ்க்கைத்
துணை
அந்தோணி
(தி. 1956; இற. 1959)
பிள்ளைகள்சோசப் (மகன் )

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

பிலோமினா கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்திலுள்ள , முள்ளூர்கராவில் தேவசி-மரியா தம்பதியரின் மகளாக 1926 இல் பிறந்தவர். பிரேம் நசீர், சத்யன் போன்ற நடிகர்களுக்கு அம்மாவாக அநேக படங்களில் நடித்துள்ள பிலோமினா 45 வருடங்களுக்கு மேலாக பெரிய திரையிலும், சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவரது கணவர் நாடக நடிகர் அந்தோணி ஆவார். இவர்களின் திருமணம் 1956 இல் நடந்தது. இத்தம்பதியருக்கு ஜோசப் என்ற மகன் பிறந்தார் .சனவரி 02, 2006 அன்று பிலோமினா காலமானார்.[4]

திரைப் படத்துறை

தொகு

இவர் 1963 இல் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அவர் பெரிய மற்றும் சிறிய கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.[3]

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் இயக்குநர் கதாப்பாத்திரம் குறிப்புகள்
1964 குட்டிக்குப்பாயம் எம்.கிருட்டிணன் நாயர் குஞ்சிப்பதும்மா
1964 கல்யாண ஃபோட்டோ ஜே.டி.தோட்டான் சேச்சம்மா

தொலைக்காட்சித் தொடர்

தொகு
  • ஸ்திரீ
  • ஜானகஈயம் ஜானகி
  • சங்குபுஷ்பம்
  • தாமரக்குழலி
  • புன்னக்கா விகாசன கழகம்
  • குடும்ப விஷேசங்கள்

விருதுகள்

தொகு

கேரள மாநில திரைப்பட விருதுகள்

தொகு
  • இரண்டாவது பரிசு-சிறந்த நடிகை – 1970 – துறக்காத வாதில், ஒளவும் தீரவும் [5]
  • இரண்டாவது பரிசு-சிறந்த நடிகை – 1987 – தனியாவர்த்தனம் [6]

கேரள திரைப்பட விமர்சகர் விருது

தொகு
  • சிறந்த நடிகை-இரண்டாவது பரிசு - 1991 - காட்பாதர்[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "ഫിലോമിന: കൃത്രിമത്വമില്ലാത്ത അഭിനയം | Webdunia Malayalam". Malayalam.webdunia.com. 2008-01-03. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  2. K, Pradeep. "Passing of a versatile actor". Archieve.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  3. 3.0 3.1 Dennis, Kaloor (2022-03-23). "Philosophy of the ever-jovial Philomina Kaloor ..." onmanorama. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  4. "அன்று கண்ட முகம்". 2014-08-25. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  5. "Kerala State Film Awards". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  6. "Kerala State Film Awards". imdb.om. பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  7. "Film Critics Award 1991". Archived from the original on 2020-10-11 – via YouTube.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலோமினா&oldid=4166854" இலிருந்து மீள்விக்கப்பட்டது