பிலோமினா தும்புச்செட்டி
பிலோமினா ருக்மாவதி தும்புச்செட்டி (Philomena Thumboochetty; 10 அக்டோபர் 1913-மார்ச் 2000) ஓர் இந்திய வயலின் கலைஞர் ஆவார். இவர் பாரீசில் இசை பயில அனுமதிக்கப்பட்ட முதல் இந்திய இசைக்கலைஞர் ஆவார்.
பிலோமினா தும்புச்செட்டி | |
---|---|
பிறப்பு | 1913 பெங்களூரு |
இறப்பு | 2000 |
மற்ற பெயர்கள் | பிலோமினா ருக்மாவதி தும்புச்செட்டி |
பணி | வயலின் |
உறவினர்கள் | தி. ஆர். ஏ. தம்புச் செட்டி (தாத்தா) |
இளமையும் கல்வியும்
தொகுபிலோமினா தும்புச்செட்டி பெங்களூரில் பிறந்து மைசூரில் கல்வி கற்றார். இவர் டி. தம்புச் செட்டி மற்றும் செல்வவதியின் மகளாவார். இவரது தந்தை மைசூர் மகாராஜாவின் தனிச் செயலாளராக இருந்தார்.[1] இவரது தாத்தா தி. ஆர். ஏ. தம்புச் செட்டி மைசூர் தலைமை நீதிமன்றத்தின் முதல் இந்தியத் தலைமை நீதிபதி ஆவார்.[2] இவரது குடும்பம் உரோமன் கத்தோலிக்க மதத்தினைச் சார்ந்தது. இவர் கல்கத்தா இசைப் பள்ளியில் இசையினைக் கற்றுக்கொண்டார். இதன் பின்னர் இலண்டன், திரினிட்டி கல்லூரியில் நிதியுதவியுடன் பயின்றார். தனது 16 வயதில், இளைய பங்கேற்பாளராக இந்தியாவிலிருந்து கன்சர்வேட்டோயர் டி பாரீசில் கலந்து இசை படிப்பினைத் தொடர அனுமதிக்கப்பட்டார்.[3] கன்சர்வேட்டோயர் டி பாரீசில் தனது படிப்பை முடித்த பிறகு, இவர் உருமேனிய வயலின் கலைஞrர் ஜார்ஜஸ் எனெஸ்கோவின் மாணவரானார்.[4]
தொழில்
தொகுதும்புச்செட்டி "வயலின் கலைஞராக இந்தியப் பெண்களில் ஒருவராகப் பெருமையடைந்தார்."[5] இவரும் இவருடைய தாயும் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாவது ஜோர்ஜ் மற்றும் ராணி மேரி 1934இல் ஒரு நிகழ்ச்சியினை நடத்தினர்.[6] 1935ஆம் ஆண்டில், இவர் இலண்டனின் ஓர் இசை நிகழ்ச்சியை ஏயோலியன் அரங்கில் வழங்கினார். 1935-இல் இந்தியாவுக்குத் திரும்பிய பின் இவர் ஒரு கச்சேரியினை ஜெகன்மோகன் அரண்மனையில் அரண்மனை இசைக்குழுவுடன் நிகழ்த்தினார்.[7][8] மகாராஜா மற்றும் உறவினர் இதில் கலந்துகொண்டனர். 1937-இல், இவர் கொல்கத்தா சிம்பொனி இசைக்குழுவுடன் இசை நிகழ்ச்சியினை நடத்தினார். இதே ஆண்டு, ஒரு குறுகிய சுயசரிதை தி இந்தியன் பிட்லர் குயின்: ஏ சார்ட் இசுகெட்ச்சு ஆப் பிலோமினா தம்புச்செட்டி (The Indian Fiddler Queen: A Short Sketch of Philomena Thumboochetty) வெளியானது.[9] 1938ஆம் ஆண்டில், கொல்கத்தா இசைப் பள்ளியில் ஐந்தாவது சிம்பொனி இசை நிகழ்ச்சியில் தனிப்பாடலாக இசைத்தார். இது அனைத்திந்திய வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.
திருமணம் மற்றும் குழந்தைகளுக்குப் பிறகு, தும்ப்ச்செட்டி பெங்களூரில் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவில்லை. இவர் தனது வாழ்க்கையின் இறுதி வரை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் தொடர்ந்து இசைப் பயிற்சி செய்து வந்தார்.[10] இவர் 1960 மற்றும் 1970களில் மேக்ஸ் முல்லர் பவன் இசைக்குழுவுடன் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இவர் வயலின் கற்பித்துள்ளார். இவரது வெற்றிகரமான மாணவர்களில் ஒருவர் கிராமி விருது வென்ற வயலின் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் மனோஜ் ஜோர்ஜ்.[11] தும்புச்செட்டி ஒரு சதுரங்க வீரங்கணையாகவும் இருந்தார்.[10]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதும்புச்செட்டி 1937-இல் பிரான்சிசு கந்தராஜ் தும்புச்செட்டி என்பவரை மணந்தார். மிர்சா இசுமாயில் இவர்களின் திருமணத்தில் உரை நிகழ்த்தினார். இவர்களுக்குச் செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்த இவரது முதல் மகள் சித்ரா[12] உட்பட ஐந்து குழந்தைகள் இருந்தனர்.[13] பிலோமினா தும்ப்ச்செட்டி 2000ஆம் ஆண்டில் இறந்தார். இவரது நினைவாக இவரது குடும்பத்தின் தும்புச்செட்டி அறக்கட்டளை ஆண்டுக்கு இரண்டு இசை நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி செய்கிறது[10][14]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kabadi Waman P. (1937). Indian Whos Who 1937-38. pp. 242 in Mysore section – via Internet Archive.
- ↑ Madhavan, Girija (2020-02-16). "Tales from Family Lore..." Star of Mysore (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
- ↑ All India Radio, Bombay (7 March 1937). "Our Indian Violinist". The Indian Listener: p. 247. https://books.google.com/books?id=0XjgDwAAQBAJ&dq=Philomena+Thumboochetty&pg=PA247.
- ↑ Rizvi, Aliyeh (27 December 2015). "Resident Rendezvoyeur: A Christmas story". Bangalore Mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-23.
- ↑ Division, Publications (1958). Women of India (in ஆங்கிலம்). Publications Division Ministry of Information & Broadcasting. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-2284-0.
- ↑ "Violinist from India". Evening Standard: pp. 23. 1935-04-17. https://www.newspapers.com/clip/89579128/violinist-from-india/.
- ↑ "Devotee of Music and Art". The Bombay Chronicle: p. 4. 6 September 1935. https://archive.org/details/dli.granth.8078/page/6/mode/2up?q=Philomena+Thumboochetty.
- ↑ Lal, Vinay (14 March 2021). "Parleying with the Infinite: India in Beethoven's Imagination". Janata Weekly (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
- ↑ Chetti, Philomena TAMBU (1937). The Indian Fiddler Queen: A Short Sketch of Philomena Thumboochetty (in ஆங்கிலம்). Dr. K. N. Kesari at the Lodhra Press.
- ↑ 10.0 10.1 10.2 Chaturvedi, Priya (2019-06-11). "Philomena Thumboochetty: Portrait of an Artiste". Serenade (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
- ↑ "3 secrets to be a great musician". Manoj George (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
- ↑ Chaturvedi, Priya (16 July 2019). "The story of a female Indian violinist whose phenomenal career was cut short by fate". Quartz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
- ↑ Ismail, Sir Mirza M. (1930). Speeches (in ஆங்கிலம்). Printed at the Government Press. pp. 140–142.
- ↑ Joseph, Krupa (2019-10-15). "'Classical music must be more accessible'". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
வெளி இணைப்புகள்
தொகு- பிலோமினா தும்பூச்செட்டி, மூலம் அல்லது மூன்று புகைப்படங்கள் லேடி ஓட்டோலின் மோரெல், தொகுப்பில் தேசிய உருவப்பட தொகுப்பு