பில்லா 2 (திரைப்படம்)

சக்ரி டொலெட்டி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பில்லா 2 (Billa II) என்பது 2012 இல் வெளிந்த ஒரு தமிழ்த் திரைப்படம். அஜீத் குமார் நடித்த இப்படத்தை சக்ரி இயக்கினார். ஒரு சாதாரண மனிதனான டேவிட் பில்லா என்பவர் எப்படி ஒரு பன்னாட்டுக் கொள்ளைக்காரனாக மாறினார் என்பதே இத்திரைப்படத்தின் கதை.

பில்லா 2
இயக்கம்சக்ரி
தயாரிப்பு
  • எல். சுரேஷ்
  • ஜார்ஜ் பையஸ்,சுனிர் கிதிரப்பா
கதைசக்ரி
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்ஒய்டு ஆங்கில் கிரியேசன்ஸ் இன் என்டெர்டெயின்மென்ட்
நாடு இந்தியா
மொழிதமிழ்

இது 2007 வெளிவந்த பில்லா திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். துணை பாத்திரங்களில் வரும் பார்வதி ஓமனகுட்டன், பருண அப்துல்லா, வித்யுத் ஜம்வல் மற்றும் சுதந்ஷு பாண்டே ஆகியோர் இப்படத்தினால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகினர்.

ராஜசேகர் ஒளிப்பதிவினை கையாண்டார் மற்றும் சுரேஷ் அர்ஸ் தொகுப்பாளராக பணியாற்றினார். படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆவார். பில்லா 2 RED EPIC கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்ட முதல் இந்திய தயாரிப்பாகும், இது ஹிந்துஜா குழுமத்தின் இன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் தயாரித்த திரைப்படமாகும்.

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இப்படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் என நவம்பர் 2010 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முரண்பாடான தேதிகள் காரணமாக, பின்பு சக்ரி டோலேடி மாற்றப்பட்டார். ஒரு புதிய உரை டோலேடி மற்றும் எரிக் பில்பேர்க் சம்பந்தப்பட்ட ஒரு குழுவால் திட்டமிடப்பட்டது. படப்பிடிப்பு ஜூலை 2011 இல் ஆரம்பிக்கப்பட்டு 2011 டிசம்பரில் முடிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு, முதன்மையாக கோவா, ஐதராபாத் மற்றும் ஜோர்ஜியாவில் நடைபெற்றது.

வெளியீடு

தொகு

பில்லா 2 2012 ஜூலை மாதம் 13 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது; டேவிட் பில்லா என்ற தலைப்பில் ஒரு மொழி மாற்றிய தெலுங்குப் பதிப்பு ஆந்திர பிரதேசத்தில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.

பாடல்கள்

தொகு

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் நா. முத்துக்குமார் எழுதியிருந்தார்.

எண் தலைப்பு பாடகர் (கள்) பாடலாசிரியர் நீளம்
1 "கேங்க்ஸ்டர்" யுவன் ஷங்கர் ராஜா, ஸ்டெப்னி நா. முத்துக்குமார் 4:07
2 "இதயம்" ஷ்வேதா பண்டிட் 4:04
3 "ஏதோ மயக்கம்" யுவன் ஷங்கர் ராஜா, தன்வி ஷா, சுவி சுரேஷ் 4:22
4 "மதுரை பொண்ணு" ஆண்ட்ரியா ஜெரிமியா 3:55
5 "உனக்குள்ளே மிருகம்" ரஞ்சித் 4:18
6 "பில்லா 2 தீம் இசை" யுவன் ஷங்கர் ராஜா 1:56
மொத்த நீளம்: 22.42

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லா_2_(திரைப்படம்)&oldid=4160240" இலிருந்து மீள்விக்கப்பட்டது