பில்ஹணன் (கவிஞர்)
பில்ஹணர் (Bilhana) 11ஆம் நூற்றாண்டின் காஷ்மீரின் காதல் கவிஞர் ஆவார். சௌரபாஞ்சசிகா எனும் காதல் கவிதையால் உலகம் முழுவதும் அறியப்பட்டவர்.
இந்தியாவின் தொன்மை வரலாற்றின் படி, காஷ்மீரப் பண்டிதரான பில்ஹணர், காஷ்மீர மன்னர் மதனபீராமாவின் மகள் யாமினிபூர்ணதிலகத்துடன் இரகசியக் காதல் கொண்டார். இவர்களது இரகசியக் காதல் வெளிப்பட்டதால், காஷ்மீர மன்னரின் ஆணைப்படி, பில்ஹணர் சிறையில் அடைக்கப்பட்டார். இரகசியக் காதல் வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாகும் வரை சிறையில் இருந்தவாறே, பில்ஹணர் ஐம்பது பத்திகள் கொண்ட சௌரபாஞ்சாசிகா எனும் காதல் கவிதை நூலை சமசுகிருத மொழியில் எழுதினார்.
தீர்ப்பின் பின்னர் இவர் மன்னரால் கொலையுண்டாரா? அல்லது நாடு கடத்தப்பட்டாரா? என்ற விவரம் அறியப்படவில்லை. இருப்பினும் இவரது காதல் கவிதைகள் இந்தியா முழுவதும் பல வடிவங்களில் வாய்மொழி மூலம் அறியப்படுகிறது. காஷ்மீரி மொழியில் வெளியாகியுள்ள இவரது காதல் கவிதையின் முடிவு சரியாகக் குறிப்படாத நிலையில், தென்னிந்தியாவில் இவரது காதல் கவிதை இன்பகரமாக முடிவடைகிறது.
பில்ஹணரின் சௌரபாஞ்சசிகா எனும் காதல் கவிதை நூல் 1848இல் பிரெஞ்சு மொழியில் வெளியானது. எட்வர்டு பௌஸ் மதர்ஸ் (Edward Powys Mathers) எனும் ஆங்கில எழுத்தாளர், சௌரபாஞ்சசிகா நூலை ஆங்கிலத்தில் கருப்பு செண்டிகைப்பூக்கள் (Black Marigolds) எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.[1][2] என்பவரால் கருப்பு செண்டிகைப்பூக்கள் (Black Marigolds) எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
தொன்மக் கதை
தொகுகாஷ்மீர மன்னரின் மகளான யாமினிபூர்ணதிலகத்துடன் கொண்ட இரகசியக் காதல் கொண்டார் பில்ஹணர் எனும் கவிஞர். இக்காதலை அறிந்த காஷ்மீர மன்னர், பில்ஹணரை சிறையில் அடைத்தார். சிறையில் பில்ஹாணர் சௌரபாஞ்சசிகா எனும் ஐம்பது பத்திகள் கொண்ட காதல் கவிதை நூலை இயற்றினார்.
பின்னர் பில்ஹணர் காஷ்மீரை விட்டு நாடு கடத்தப்பட்டார். பின்னர் பில்ஹணர் மதுரா, கன்னோசி, பிரயாகை, வாரணாசி, சோமநாதபுரம், துவாரகை, கல்யாண் மற்றும் இராமேஸ்வரம் போன்ற புனிதத் தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்றார்.[3] பில்ஹணர் கல்யாண் நகரத்திற்கு மீண்டும் வந்த போது, மேலைச் சாளுக்கியப் பேரரசர் பில்ஹணரை தனது அரசவைப் புலவராகக் கொண்டார். இதனால் மனம் மகிழ்ந்த பில்ஹணர் மன்னரைப் பாராட்டும் விதமாக விக்கிரமாங்கதேவ சரிதம் எனும் நூலை ஆக்கினார்.[4]
திரைப்படங்களில் பில்ஹணர்
தொகுதிரைப்படங்களில் பில்ஹாணவின் காதல் வாழ்க்கை குறித்து தமிழில் 1948ஆம் ஆண்டில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Black Marigolds by E. Powys Mathers
- ↑ Black Marigolds
- ↑ Sreedharan, E, "A Textbook of Historiography: 500 BC to AD 2000". New Delhi, Oreient Black Swan, 2004,p. 326 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-2657-6 [1]
- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 52–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
- Introduction to The Secret Delights of Love, Peter Pauper Press (1966).
வெளி இணைப்புகள்
தொகு- Black Marigolds, at sacred-texts.com
- The Caurapâñcâśikâ (The Love-Thief) Poesy rendering into English 2013