பில் மேகர்
பில் மேகர் ஒரு அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர், அரசியல் சமூக கருத்தாளர், எழுத்தாளர். இவரது Real Time With Bill Maher நிகழ்ச்சி HBO ஒளிபரப்படுகிறது. இதற்கு முன் Politically Incorrect என்ற நிகழ்ச்சியை வழங்கினார்.
பில் மேகர் | |
---|---|
பில் மேகர், செப்டம்பர் 2010 | |
இயற்பெயர் | William Maher, Jr. |
பிறப்பு | சனவரி 20, 1956 நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
Medium | மேடைச் சிரிப்புரை, தொலைக்காட்சி, திரைப்படம், நூல் அமைப்பு |
தேசியம் | அமெரிகர் |
நடிப்புக் காலம் | 1979 – தற்காலம் |
நகைச்சுவை வகை(கள்) | Political satire, Observational comedy |
தலைப்பு(கள்) | American politics, current events, American culture, பரவலர் பண்பாடு, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சூழலியம், சமயம், மாந்த பாலுணர்வியல், recreational drug use, சுதந்திரவாதம், American liberalism |
செல்வாக்கு செலுத்தியோர் | Johnny Carson, George Carlin, David Frost, Steve Allen |
முக்கிய தயாரிப்புகளும் பாத்திரங்களும் | Host of Politically Incorrect Host of Real Time with Bill Maher |
இணையத்தளம் | www.BillMaher.com |
இவரது அரசியல் அங்கதத்துக்காக இவர் அறியப்படுகிறார். கடுமையாக வலது சாரிகளை தாக்கிப் பேசுவார். இவர் தாராண்மியவாத கொள்கை உடையவர். சமய நிறுவன எதிர்ப்பு, தன்னினச்சேர்கையாளருக்கு ஆதரவு, மிருக உரிமைகள் ஆதரவு ஆகிய நிலைப்பாடுகள் உடையவர். இவரது சமயத்தை விமர்சனம் செய்து ரிலியலஸ் என்ற விபரணப் படத்தையும் வெளியிட்டுள்ளார்.