பிளம்போசீன்

பிளம்போசீன் (Plumbocene) என்பது C10H10Pb என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஈயத்தின் கரிம உலோகச் சேர்மமாகும். மெட்டலோசீன் எனப்படும் உலோக மையக் கரிமச் சேர்மங்களில் பிளம்போசீன் ஓர் உறுப்பினராகும். பென்சீன், அசிட்டோன், ஈதர், பெட்ரோலியம் ஈதர் போன்ற கரைப்பான்களில் பிளம்போசீன் கரைகிறது. ஆனால் தண்ணீரில் இது கரையாது. குளிர்ந்த நீரில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படும். [1]

பிளம்போசீன்
இனங்காட்டிகள்
1294-74-2 Y
பண்புகள்
C10H10Pb
வாய்ப்பாட்டு எடை 337.39 g·mol−1
கொதிநிலை 150 °C (302 °F; 423 K) at 10−7 mmHg[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

வர்த்தக ரீதியாக பிளம்போசீன் கிடைப்பதில்லை. சோடியம் வளையபெண்டாடையீனுடன் ஈயம்(II) நைட்ரேட்டு [1] அல்லது ஈயம்(II) அயோடைடு [2] போன்ற ஈயம்(II) வழங்கும் மூலப்பொருள்களில் ஒன்றை சேர்த்து வினைபுரியச் செய்து பிளம்போசீன் தயாரிக்கப்படுகிறது. பிளம்போசீனின் Cp*PbBF4 மற்றும் Cp*PbCl போன்ற அரை இடையீட்டுச் சேர்மங்களும் Cp*2Pb என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் டெக்காமெத்தில் ஒப்புமைச் சேர்மமும் அறியப்படுகின்றன. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Ernst Otto Fischer; Grubert, H. (1956). "Über Aromatenkomplexe von Metallen. IV. Di-cyclopentadienyl-blei". Zeitschrift für anorganische und allgemeine Chemie 286 (5–6): 237. doi:10.1002/zaac.19562860507. 
  2. Izod, Keith; McFarlane, William; Wills, Corinne; Clegg, William; Harrington, Ross W. (2008). "Agostic-Type...Pb Interactions Stabilize a Dialkylplumbylene. Structure of and Bonding in [{nPr2P(BH3)}(Me3Si)C(CH2)]2Pb". Organometallics 27: 4386. doi:10.1021/om800598b. 
  3. Jutzi, Peter; Dickbreder, Reiner; Nöth, Heinrich (1989). "Blei(II)-Verbindungen mit π-gebundenen Pentamethylcyclopentadienylliganden – Synthesen, Strukturen und Bindungsverhältnisse". Chemische Berichte 122 (5): 865. doi:10.1002/cber.19891220512. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளம்போசீன்&oldid=4168932" இலிருந்து மீள்விக்கப்பட்டது